உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / கோவைப்புதுாரில் 5 சென்ட் நிலம் எவ்வளவு கொடுத்து வாங்கலாம்?

கோவைப்புதுாரில் 5 சென்ட் நிலம் எவ்வளவு கொடுத்து வாங்கலாம்?

கோவை மாவட்டம், கோவைப்புதுாரில் உள்ள சி.பி.எம்., கல்லுாரி பின்புறம், டீ.டி.சி.பி., ரெரா அனுமதி பெற்ற தெற்கு பார்த்த, 5.5 சென்ட் இடத்தை, என்ன விலை கொடுத்து வாங்கலாம்?-சண்முகம், கோவை.தாங்கள் கூறியுள்ள இடம் பள்ளி, கல்லுாரி சூழ்ந்தது. அதுமட்டுமின்றி தற்போது ரிங் ரோடு அருகாமையில் இருப்பதால், குடியிருப்பு, ஹோட்டல் ஆகியவற்றுக்கு ஏற்ற இடம். மேற்கண்ட காரணங்களால் சென்ட் ஒன்றுக்கு, ரூ.9.5 லட்சம் மதிப்பிடலாம்.காந்திபுரம், 7வது வீதியில் மேற்கு பார்த்த, 7 சென்ட் இடத்தில், மூன்று மாடி கொண்ட, 80 அறைகள் கொண்ட லேடீஸ் ஹாஸ்டல் விலைக்கு வருகிறது. என்ன விலை கொடுக்கலாம்?-கோபாலகிருஷ்ணன், கோவை.இந்த இடம், 'ரெசிஸ்டன்ஸ் அண்ட் கமர்சியல்' பகுதியாக உள்ளது. நீங்கள் சொல்லும் ஹாஸ்டலுக்கு, அரசாங்க சான்றிதழ்களான பில்டிங் ஸ்டேபிலிட்டி, மாசு, தீயணைப்பு துறை என அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து, சரியாக இருப்பின் ரூ.3.5 கோடி கொடுக்கலாம்.நீலகிரி மாவட்டம், மேல் கூடலுார் பகுதியில் சுமார், 4 சென்ட் இடம் மற்றும் அதில் கட்டியுள்ள, 600 சதுரடி தரைதளம் வீடு, மின் இணைப்பு, குடிநீர் என அனைத்தும் சேர்த்து விலைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்?-சூரஜ் பிரசாத், கூடலுார்.தாங்கள் கூறியுள்ள இடம் கூடலுார் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 1.5 கி.மீ., துாரத்தில் இருக்கிறது. தாங்கள் அணுகு பாதை பற்றி கூறவில்லை. எனவே, அங்குள்ள சூழ்நிலை, அணுகு பாதை அகலம் மற்றும் படிக்கட்டுகள் ஆகியவற்றை பொறுத்து, ரூ.20 லட்சம் பெறும்.நான் தற்போது வாங்க இருக்கும், 19 வருட பழமையான அபார்ட்மென்ட் ஒன்றில் முந்தைய உரிமையாளரின், பதிவு செய்யப்படாத 'கன்ஸ்ட்ரக்ஷன் அக்ரிமென்ட்'ல் கார் பார்க்கிங் உடன் என எழுதப்பட்டுள்ளது. அதை வாங்கும்போது எவ்வாறு ஆவணப்படுத்திக்கொள்வது என விளக்கம் அளிக்கவும்.-கயல்விழி, கோவை.இன்றைய காலகட்டத்தில் மனை மற்றும் கட்டடம் என்று பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதில் மனை பற்றி குறிப்பிடும்போது, பிளாட்தாரருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பிரிபடாத நிலப்பிரிவை(யு.டி.எஸ்.,) குறிப்பிடுவதுடன், கட்டடத்தின் பரப்பளவு 'பிளின்த்' ஏரியாவையும் காண்பித்து எழுதப்படும். அத்துடன், 'அனுபந்தம்' என்று ஒரு படிவம் இணைக்கப்படும். அந்தப்படிவத்தில், கூடுதலாக கடைசியில் ஒரு பிரிவாக, 'கார் பார்க்கிங் ஸ்லாட் நம்பர்' என குறிப்பிட்டு காண்பித்து, உங்கள் உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும்.தகவல்: ஆர்.எம்.மயிலேருகன்சல்டிங் இன்ஜினியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ