உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / தொப்பம்பட்டி பிரிவு அருகே  ஐந்து சென்ட் என்ன விலைக்கு வாங்குவது லாபகரமானது?

தொப்பம்பட்டி பிரிவு அருகே  ஐந்து சென்ட் என்ன விலைக்கு வாங்குவது லாபகரமானது?

கோவை தண்ணீர் பந்தல் ரோட்டில், 2010ல் கட்டிய, 1,000 சதுரடி 'ஆர்.சி.சி., தாரஸ்' கட்டடம், 2017ல் விலைக்கு வாங்கப்பட்டது. உரிய வரி, 2025 வரை செலுத்தப்பட்டுள்ள நிலையில், 640 அடிக்கு தாரஸ் கட்டடம் எழுப்பப்பட்டது. வாங்கும்பொழுது விளாங்குறிச்சி பஞ்சாயத்து வரி விதிப்பாளர் பார்வையிட்டு தரைதளம், ஒன்றாம் தளம், இரண்டாம் தளம் வரி விதித்தும் வரைபடம் இல்லை என்று அபராதம் விதித்துள்ளனர். தொழிலாளர் நில கட்டணம் என்ற பெயரில், தொழிலாளர் நல நிதி கடந்த மார்ச், 28ம் தேதி வசூலிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் பரப்பளவு, 1,934 சதுரடி, வரி விதிப்புக்கு தரைதளத்துக்கு ரூ.4,000, ஒன்றாம் தளத்துக்கு ரூ.7,000, இரண்டாம் தளத்துக்கு ரூ.1,800, சேவை கட்டணம் ரூ.9,000, நலத்திட்ட கட்டணம் ரூ.16 ஆயிரத்து, 870 வசூல் செய்துள்ளனர். இது சரியா, தவறா?-வரதராஜன், வெள்ளலுார்.தங்கள் கேள்விக்கு சரியான, முழுமையான பதிலை சம்பந்தப்பட்ட ஆவணங்களை பார்க்காமல், ஆராயாமல் சொல்ல இயலாமல் இருக்கிறது. எனினும், பொதுப்படையாக கடந்த ஒன்றரை ஆண்டுக்குள், மாநகராட்சி நடத்திய டிரோன் சர்வேயில் நிறைய குளறுபடிகள் உள்ளதாக மக்கள் வருத்தமும், கொந்தளிப்பும் அடைந்து உள்ளனர்.இதுபற்றி புகார் அளிக்க, வரி மேல்முறையீட்டு குழு அமைத்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால், அது நடைமுறையில் உள்ளதா என தெரியவில்லை. ஒரு புறம் தகவலாக கேட்பதுடன், மறுபுறம் கேள்விகளாக வரி விதிப்பவர் வரி மேல்முறையீட்டு குழுவிடம், முறையீட்டு மனுவாக பதிவு தபாலில் பதிந்து, நடவடிக்கைக்காக காத்திருக்கவும்.பல்லடம்-கொச்சி எல்லை சாலையில், சாந்தி பீட்ஸ் யூனிட் அருகே மேற்கு பார்த்த டி.டி.சி.பி., அனுமதி பெறாத காலி இடம் விற்பனைக்கு வருகிறது. சென்ட் என்ன விலைக்கு வாங்கலாம்.- அசோக்குமார், சிங்காநல்லுார்.முதலில் மேற்கு பார்த்த இடம் என்பது உங்களுக்கு, உங்கள் குடும்பத்துக்கு உகந்ததா என நண்பர்கள், பெரியவர்கள் வாயிலாக தெரிந்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். அடுத்து, டி.டி.சி.பி., அப்ரூவல் இல்லாத இடத்தை, அந்த நிலையில் வாங்குவது தவறு.வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் அது வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை பார்க்கவும். சட்ட ஆலோசனை பெற்று அந்த இடத்தை வாங்கலாம். 'பீட்ஸ்' என்று நீங்கள் சொல்வது சரியான அர்த்தமாகவில்லை. அங்கு வாசனை உணர்ந்தீர்கள் என்றால் இடம் வாங்குவதை தவிர்ப்பது சால சிறந்தது.கோவை மாவட்டம், குருடம்பாளையம் கிராமத்தில், தொப்பம்பட்டி பிரிவு சிட்ரா நகர் பின்புறம் வடக்கு பார்த்த, டி.டி.சி.பி., அப்ரூவல் சுமார் ஐந்து சென்ட் இடம் (40x55 அடி) விற்பனைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்.- ராஜசேகர், கோவை.தாங்கள் கூறும் இடம் கோவை மாநகராட்சி எல்லையில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ளது. மற்றும் தற்போது நன்கு வளர்ந்த பகுதியாகவும் உள்ளது. பிரபலமான தொழிற்சாலைகள், கடைகள் ஆகியவை உள்ளன. ஆகவே, சென்ட் ரூ.13 லட்சம் பெறும்.தகவல்: ஆர்.எம். மயிலேறு, கன்சல்டிங் இன்ஜினியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ