உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / நிபந்தனை இல்லாத செட்டில்மென்ட் பத்திரத்தின் அடிப்படையில் சொத்து வாங்கலாமா?

நிபந்தனை இல்லாத செட்டில்மென்ட் பத்திரத்தின் அடிப்படையில் சொத்து வாங்கலாமா?

புதிதாக வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது, அது தற்போது யார் பெயரில் உள்ளது, அவருக்கு எப்படி வந்தது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒரு நபர் சுயமாக சம்பாதித்த சொத்து என்று பத்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தால், அதில் வேறு யாரும் உரிமை கோர முடியாது. இவ்வாறு ஒரு நபர் சுயமாக சம்பாதித்த சொத்தை அவரது சுய விருப்பத்தின் அடிப்படையில், அவரிடம் இருந்து நேரடியாக நீங்கள் வாங்கும் போது எவ்வித பிரச்னையும் இல்லை. அதே நேரத்தில், சொத்து வாங்கிய நபர் இறந்த நிலையில் வாரிசுகள் மத்தியில் ஏற்பட்ட ஒருமித்த முடிவு அடிப்படையில் வெளியார் அந்த சொத்தை வாங்கும் போதும் பிரச்னை இல்லை. ஆனால், சொத்தை சம்பாதித்த நபர் உயிருடன் இருக்கும் நிலையில் அவர் கொடுத்ததாக குறிப்பிடப்படும் தான பத்திரத்தை நம்பி சொத்தை வாங்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தற்போது அமலில் உள்ள சட்ட விதிகளின்படி ஒரு நபர் தனஜ் பெயரில் உள்ள சொத்தை குடும்ப உறுப்பினர்கள் யார் பெயருக்கு வேண்டுமானாலும் தான பத்திரம் அல்லது செட்டில் மென்ட் பத்திரம் வாயிலாக வழங்கலாம். இது போன்ற செட்டில் மென்ட் பத்திரம் வாயிலாக ஒருவர், இன்னொருவருக்கு கொடுத்த சொத்தை திரும்ப பெற முடியாது. ஆனால், எதார்த்த நிலையில், பல இடங்களில் பெற்றோர், செட்டில் மென்ட் பத்திரம் வாயிலாக வாரிசுகளுக்கு சொத்து கொடுத்து விடுகின்றனர். இவ்வாறு சொத்து பெற்ற வாரிசுகள் பெற்றோரை கவனிக்காமல், அல்லல்பட வைக்கும் சூழலில், தான் சம்பாதித்த சொத்தை, அந்த வாரிசுகள் அனுபவிப்பது நியாயமா என்ற கேள்வி எழுகிறது. இதனால், செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய என்ன வழி என்று பெற்றோர்கள் தேடுகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட பெற்றோர், அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கும் நிலையில் வருவாய் துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டு இதில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில வழக்குகளில் செட்டில்மென்ட் பத்திரங்கள் ரத்து செய்யப்படுகின்றன. எனவே, நீங்கள் புதிதாக சொத்து வாங்கும் போது, அதை விற்பவர் செட்டில்மென் பத்திரம் வாயிலாக பெற்றவராக இருந்தால், அதில் ஆட்சேபனை ஏதாவது பதிவாகி உள்ளதா என்று பாருங்கள். சொத்தின் மீது வருவாய் துறையில் ஏதாவது நடவடிக்கை நிலுவையில் உள்ளதா என்பதை பாருங்கள். பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான பிரச்னையால், அந்த சொத்தை வாங்க வரும் நபர் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது. இதற்கு நீங்கள் சொத்து வாங்கும் நிலையில் அதன் செட்டில்மென்ட் பத்திரம் தொடர்பான பிரச்னைகள் என்ன என்பதை கவனிக்க வேண்டும் என்கின்றனர் வருவாய்துறை அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Siva
ஏப் 20, 2024 21:58

வணக்கம் ஐயா நான் சிவா நான் சிங்கப்பூரில் பனி புரிந்து கஷ்டபட்டு எனது பூர்வீக இடத்தில் ஒரு வீடு கட்டினேன் அதன்பட்டா கிராம நத்தம் அனைத்தும் எனது தகப்பனார் பெயரில் உள்ளதுதற்போது அவர் அந்த வீட்டை எனது தம்பி பெயர்க்கு உயில் எழுதி வைத்துள்ளான்மேலும் முக்கிய சொத்து அனைத்தையம் தம்பி பெயர்க்கு உயிலாக எழுதி வைத்துள்ளான்உயில் ஏதும் பதியபடவில்லை பூர்வீக சொத்து அனைத்தும் எனது அப்பன் பெயரில் பட்டா மாற்றி வைத்துக்கொன்டான்இந்த பூர்வீக சொத்துகளை எனது அனுமதியின்றி விற்கவோ அல்லது எனது உடன்பிறப்புகளுக்கு மாற்றி எழுதி வைக்க எனது தகப்பனாரால் முடியுமா தயவு செய்து விளக்கம் தாருங்கள் நான் சிங்கபூரில் பதினைந்து வருடம் கட்டிட வேலை செய்து கஷ்டபட்டு எனது இரு அக்கா தங்கை திருமனம் செய்து கொடுத்தேன் மற்றும் வீடு கட்டினேன் எனது அப்பன் பெரிய திருடனாக இருக்கிறான்எனது வருமானம் அனைத்தையும் பெற்றுக்கொண்டு எனை நடு ரோட்டில் விட்டுவிட்டான் யாருக்கம் இதுபோல் தகப்பன் அமைய கூடாது இறைவா?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ