உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / அஸ்திவாரத்துக்கு பிளை ஆஷ் பயன்படுத்தலாமா?

அஸ்திவாரத்துக்கு பிளை ஆஷ் பயன்படுத்தலாமா?

''பொதுவாக அஸ்திவாரம் அமைக்கும் போது, செங்கற்களை விட பிளை ஆஷ் கொண்டு கட்டுவது சிறந்தது,'' என்கிறார், கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க (காட்சியா) பொறியாளர் கவிராஜ்.* நாங்கள் புதிதாக வீடு கட்டி 2 மாதங்களே ஆகியுள்ள நிலையில், முதல் தளத்தில் சங்கன் சிலாப்பால் அமைத்த கழிவறையால், நீர்க்கசிவு ஏற்படுகிறது. இதற்கான தீர்வு என்ன?--குமார், சுண்டப்பாளையம். எப்பொழுதும் ஒரு வீட்டின் சங்கன் சிலாப் அமைக்கும் நிலையில், அதற்கு முதலில் சரியான வாட்டர் ப்ரூபிங் செய்து, ஸ்பவுட் பைப் அமைக்க வேண்டும். அதற்குப் பின், பிளம்பிங் பைப்புகளுக்கான உடைத்த ஓட்டைகளை, சரியான முறையில் அடைத்து, கிரிட் கான்கிரீட் போட வேண்டும். அதன் பின் மேலே ஒட்டும் டைல்ஸ்க்கு ஸ்பெஷர் பொருத்தி, சரியான முறையில் எப்பக்சி கிரவுட் செய்வதன் வாயிலாக, நீர் கசிவை தடுக்கலாம். * நாங்கள் புதிதாக வீடு கட்டி முடிவடையும் நிலையில், வீட்டிற்கு தேவையான எலக்ட்ரிக்கல் ஒயர்களை, எந்த தரத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்? --பழனியப்பன், மாதம்பட்டி. ஒரு வீட்டுக்கு தேவையான ஒயர்களை வாங்கும் முன், முதலில் அந்த எலக்ட்ரிக்கல் ஒயர் எந்த வகையான கிரேடு என்பதை அறிய வேண்டும். உதாரணமாக: FR,FRLF,FRLFSH. * வீட்டின் கழிவறையில் உள்ள பைப்பில், ஒரு ஏர்வென்ட் அமைத்துள்ள நிலையிலும், அடிக்கடி துர்நாற்றம் வருகிறது. இதற்கு என்ன காரணம்? -சுகுமாரன், சுந்தராபுரம்.எப்பொழுதும் ஒரு வீட்டின் கழிவறையிலிருந்து செல்லும் அவுட்லெட் பைப்பில், ஏர்வென்ட் அமைத்தாலும், செப்டிக் டேங்க் அமைந்திருக்கும் இடத்தில், கட்டாயமாக ஒரு ஏர்வென்ட் பைப் அமைப்பதன் வாயிலாக, இவ்வகை பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.* வீட்டின் உட்புறச் சுவர்களில் வரும் ஓதத்தை தடுக்க என்ன செய்ய வேண்டும்? -பன்னீர்செல்வம், கருமத்தம்பட்டி.பொதுவாக ஒரு வீட்டின் பேஸ்மென்ட் லெவல் கட்டடம் முடிப்பதற்கு முன், அதன் மேல் ஆல்ரவுண்ட் டைபிங் அமைப்பதன் வாயிலாக, கீழிருந்து மேலே வரும் Dampness தடுக்கலாம். இதுதான் இதற்கு தீர்வு.* நாங்கள் புதிதாக வீடு கட்ட உள்ளோம். அஸ்திவாரத்துக்கு, செங்கல் வைத்து கட்டுவது நல்லதா? பிளை ஆஷ் வைத்து கட்டுவது நல்லதா?-ஜெயலட்சுமி, மதுக்கரைபொதுவாக அஸ்திவாரம் அமைக்கும் போது, செங்கற்களை விட பிளை ஆஷ் கொண்டு கட்டுவது சிறந்தது. ஏனெனில் தண்ணீரால் வரும் அரிப்பு தன்மை போன்ற பிரச்னைகளை, பிளை ஆஷ் கொண்டு கட்டுவதன் வாயிலாக தடுக்கலாம். செங்கலின் விலை அதிகம். ஆகவே, ப்ளை ஆஷ் கொண்டு கட்டுவதால், பேஸ்மென்ட் செலவையும் குறைக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை