உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை /  வேகமான கட்டுமானத்துக்கான சிமென்ட் அழுத்தம் தாங்குவதை விவரிக்கும் கிரேடு

 வேகமான கட்டுமானத்துக்கான சிமென்ட் அழுத்தம் தாங்குவதை விவரிக்கும் கிரேடு

சி மென்டில் ஆர்டினரி போர்ட்லேண்ட் சிமென்ட்(ஓ.பி.சி.), போர்சிலின் சிமென்ட், சல்பேட் ரெசிஸ்டன்ஸ் சிமென்ட், ராபிட் ஹார்டனிங் சிமென்ட், ஒயிட் சிமென்ட், போர்ட்லேண்ட் போசாலனா சிமென்ட்(பி.பி.சி.) என பல வகைகள் உள்ளன. அதிகம் பயன்படுத்துவது ஓ.பி.சி. மற்றும் பி.பி.சி., சிமென்ட் என்கிறார், கட்டுமான மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு மாநில பொருளாளர் ஜெகதீசன். அவர் மேலும் பகிர்ந்துகொண்டதாவது... ஓ.பி.சி. சிமென்ட் 33, 43, 53 என மூன்று தரங்களில் விற்கப்படுகிறது. இந்த சிமென்ட் அதன் முழு வலிமையை அடைவதற்கு, 28 நாட்கள் தேவைப்படுகிறது. 53 கிரேடு என்பது அதன் அழுத்தம் தாங்கும் தன்மையை குறிக்கிறது. இந்த சிமென்ட் பயன்படுத்தப்பட்ட கான்கிரீட், 28 நாட்களில் ஒரு சதுர மி.மீ.க்கு, 53 நியூட்டன் அழுத்தத்தை தாங்கும்(53N/mm) என்பது பொருள். இது உயரமான கட்டடங்கள், பீம்கள், துாண்கள், பாலம், மேம்பாலம் போன்ற அதிக சுமை தாங்கும் அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதை பயன்படுத்திய பிறகு முழு அளவில் நீர் அடித்தல்(கியூரிங்) செய்யாவிட்டால் வெடிப்புகள் வர வாய்ப்புகள் அதிகம். மற்ற சிமென்டை விட இது விலை அதிகம். பி.பி.சி. கிரேடு என்பது வீட்டு கட்டுமானத்திற்கு ஏற்றது. கட்டட வேலைகளில் பூச்சு வேலை, கட்டுமான வேலை, டைல்ஸ் தள வேலை போன்றவற்றுக்கு இந்த சிமென்ட்டை பயன்படுத்துவது நல்லது. இது மெதுவாகவே வலிமை பெறும்; விரிசல் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. பூச்சு வேலைகளுக்கு 'ஸ்மூத் பினிஷிங்' கொடுக்கும். பயன்படுத்திய பிறகு, 10 நாட்கள் நீரடித்தல் வேண்டும். வேகமான கட்டுமானத்துக்கு இது ஏற்றதல்ல. குளிர், ஈரப்பதம் அதிகமாக இருந்தால் பிணைப்பு நேரம் மெதுவாக இருக்கும். மண்ணிலும், தண்ணீரிலும் உள்ள சல்பேட் ரசாயன தாக்கத்தில் இருந்து கம்பிகளை துருப்பிடிக்காமல் பாதுகாக்க தயாரிக்கப்பட்ட சிமென்ட் இது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி