உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என்ன? விளக்கம் அளிக்கும் பொறியாளர்கள்

வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என்ன? விளக்கம் அளிக்கும் பொறியாளர்கள்

வாடகைக்கு கட்டடம் கட்டி விடும்போது, கடைகள் கட்டுவது அல்லது குடியிருப்புகள் கட்டுவது நல்லதா? -ராமசாமி, வெங்கிட்டாபுரம். வாடகைக்கு கட்டடம் கட்டும்போது, பொதுவாக கடைகள் கட்டுவதனால், 10 முதல் 15 சதவீதம் வரை கட்டுமான செலவுகள் குறையும். கடைகள் கட்டும் பொழுது பராமரிப்பு செலவுகள் குறைவு. ஏனெனில், கடைகளில் சமையலறை மற்றும் குளியல் அறை பராமரிப்பு செலவுகள் குறைவு. குடியிருப்புகள் கட்டும் பொழுது பராமரிப்பு செலவுகள் அதிகம். அபார்ட்மென்ட் மற்றும் 'ஷாப்பிங் மால்' கட்டும்போது, எந்தெந்த துறையில் அனுபவம் வாய்ந்த வல்லுனர்கள் தேவை? -சுகுமாரன், இடையர்பாளையம். அபார்ட்மென்ட், ஷாப்பிங் மால் கட்டும் பொழுது கட்டட பொறியாளர், மண் பரிசோதனை, இன்டீரியர் டிசைன், ஸ்டிரக்சுரல் டிசைன், தீ தடுப்பு பாதுகாப்பு, குவாண்டிட்டி சர்வேயிங் போன்ற துறைகளில், சிறந்த வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர். கட்டிய வீட்டினை வாங்கும் போது, என்னென்ன கவனிக்க வேண்டும்? -விஜயகுமார், துடியலுார். கட்டிய வீட்டினை வாங்கும் போது, மு தலில் வீடு கட்டிய லே-அவுட் செல்லும் அணுகுசாலை அகலம் எவ்வளவு உள்ளது என்பதை பார்க்கவும். பின்பு அங்கு போர்வெல் தண்ணீரின் அளவு எந்த மட்டத்தில் உள்ளது; குடிநீர் வசதி ஆகியவற்றை கவனிக்கவும். கட்டடத்தின் தரத்தை முக்கியமாக கவனிக்கவும். அடுத்ததாக, எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங்குக்கு பயன்படுத்திய பொருட்கள் தரமானதா என்பதை முக்கியமாக பார்க்கவும். பிரீ பேப்ரிகேஷன் பில்டிங் கட்டுவதால், ஏற்படும் நன்மைகள் என்னென்ன? -ராஜா, குனியமுத்துார். பிரீ பேப்ரிகேஷன் கட்டடம் கட்டும்பொழுது நேரம் குறைந்தபட்சம், 60 சதவீதம் மிச்சமாகிறது. கட்டடங்களின் கழிவு குறைவாகிறது. இதனால் அருகிலுள்ள கட்டடங்களுக்கு, மாசு ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளலாம். மிகப்பெரிய கட்டடங்கள் கட்டும் பொழுது செலவுகள் குறையும். கட்டடங்களுக்கு டி.எம்.டி., கம்பிகளுக்கு பதிலாக, எப்.ஆர்.பி., கம்பிகள் பயன்படுத்தலாமா? -சந்திரன், வடமதுரை. இப்பொழுது புதிதாக மார்க்கெட்டில் வந்துள்ள எடை குறைவான எப்.ஆர்.பி., கம்பிகள் இண்டஸ்ட்ரியல் புளோரிங், டிரைனேஜ் ஸ்ட்ரக்ச்சர் மற்றும் தொட்டி மூடிகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். - பொறியாளர் ரவி, பொருளாளர், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை