உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / வீடு கட்டுமானத்தை யாரிடம் ஒப்படைப்பது? இன்ஜினியரிடமா... மேஸ்திரியிடமா?

வீடு கட்டுமானத்தை யாரிடம் ஒப்படைப்பது? இன்ஜினியரிடமா... மேஸ்திரியிடமா?

ஒரு கனவு இல்லத்தை கட்டுவதற்கு தேவையான இடத்தை, எப்படி தேர்வு செய்வது?-குமார், ஆலாந்துறை.கட்டுமான இடத்தை தேர்ந்தெடுக்கும் முன் அந்த இடம், சுற்றுவட்டாரம் பாதுகாப்பாக உள்ளதா, போக்குவரத்துக்கு நமக்கு சவுகரியமாக இருக்கிறதா, குடிநீர், மின்சார வசதி உள்ளதா என்பதை, முதலில் ஆய்வு செய்ய வேண்டும்.அது பழைய லே-அவுட் ஆக இருந்தால், அந்த இடத்தை வரன்முறைப்படுத்தி இருக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். புதிய லே-அவுட் ஆக இருந்தால் அது, டீ.டி.சி.பி.,யாக இருக்க வேண்டும். சட்ட ஆலோசனை பெற்று வாங்குவது மிகவும் நல்லது. கிழக்கு, வடக்கு திசையில் 'சைட்' வாங்கினால், இடம் விரயமாகாமல் அதில் முழுவதுமாக கட்டடம் கட்ட முடியும். சைட் சதுர வடிவம் இல்லாமல், செவ்வக வடிவமாக இருப்பது நல்லது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.கட்டட வரைபடத்தை, யாரைக்கொண்டு தயாரிப்பது என்பதை விளக்கமாக கூறவும்?-வினேத்குமார், சூலுார்.கட்டட வரைபடம் என்பது மிகவும் முக்கியமானது. இதற்கு ஒரு சிறந்த அனுபவம் வாய்ந்த பொறியாளரை அணுகினால் மிகவும் நல்லது. இதில் வாஸ்து முறைப்படி எந்த திசையில் எந்த அறை வைப்பது, சமையல் அறை, படுக்கை அறை, ஹால், பூஜை அறை, குளியல் அறை என எந்த முறையில் இருக்க வேண்டும் என்பதை, தெளிவாக வரைபடத்தில் காண்பிப்பார்கள். தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்க் இடத்தை தெளிவாக தெரிவிப்பார்கள். நிலவு வைப்பது என்பது உச்சமான பகுதியில் வைக்க வேண்டும். எனவே, ஒரு பொறியாளரை வைத்து வரைபடத்தை தயாரிப்பது மிக முக்கியமானது.எனது கனவு இல்லத்தை கட்ட, பொறியாளர் அல்லது மேஸ்திரி யாரை தேர்ந்தெடுப்பது?-மூர்த்தி, சுந்தராபுரம்.கட்டடம் கட்ட ஒரு சிறந்த அனுபவம் வாய்ந்த, பொறியாளர்களை தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது. காரணம், அவர்கள் நிறைய கட்டடம் கட்டி இருப்பார்கள்; கட்டிக்கொண்டும் இருப்பார்கள். அவர்கள் கட்டக்கூடிய இடத்தில் சென்று பார்வையிடுங்கள்.தரமானதாகவும், உறுதியாகவும் கட்டிக்கொண்டிருக்கிறாரா என ஆராய்ந்து, ஒப்பந்தம் செய்து கொண்டால் மிகவும் நல்லது. ஒப்பந்தம் செய்து கொள்ளும் முன், உங்கள் தேவைகளை அவரிடம் எடுத்துக்கூறினால், அதற்கு உண்டான மதிப்பீடு தயார் செய்வார்கள்.புளோரிங் கான்கிரீட் போடுவதற்கு, முக்கால் இன்ச் ஜல்லி பயன்படுத்தலாமா?-சுகுமாரி, வடவள்ளி.தாராளமாக பயன்படுத்தலாம். முக்கால் இன்ச் ஜல்லி போடும்போது கான்கிரீட் நன்றாக இறுக்கமாவதுடன், வலிமை வாய்ந்ததாகவும் இருக்கும். ஆனால், செலவு சற்று கூடுதல் ஆகும்.தண்ணீர் தொட்டி கட்டும்போது, 'வாட்டர் ப்ரூப்' பொருளை கான்கிரீட் அல்லது பூச்சு என எந்த நிலையில் பயன்படுத்த வேண்டும்?-பழனியப்பன். குனியமுத்துார்.இரண்டு நிலைகளிலும் பயன்படுத்தும் கெமிக்கல்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தலாம். அல்லது பூச்சு கலவையிலும், பூசியபிறகும் அதற்கென உள்ள கெமிக்கல்களை பயன்படுத்த வேண்டும்.- பொறியாளர் பிரேம்குமார் பாபு,இணை செயலாளர்,கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்(காட்சியா).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ