கட்டடத்தின் வெளிப்புற வெடிப்புக்கு காரணம் என்ன? இயற்கை பாதிப்புகள் குறித்து பொறியாளர் விளக்கம்
மொட்டை மாடியில் இருந்து: -கோபி: பொதுவாகவே கட்டடங்களில் வெளிப்புற சுவர்களிலும், மொட்டைமாடி தளத்திலும் வெயில், மழை போன்ற இயற்கை காரணங்களாலும், கட்டுமானத்தின் போது ஏற்படுகிற மனித தவறுகளாலும் இதுபோன்ற வெடிப்பு ஏற்படுகிறது. மொட்டை மாடி தளத்தை அடிக்கடி கூட்டி சுத்தப்படுத்தி, பராமரிக்காமல் இருக்கும்போது அங்கே காய்ந்த இலைகளும், சருகுகளும், மண் துாசுகளும் தேங்கி மழைநீர் வெளியே செல்ல தடை ஏற்படுகிறது. இதனால், மழைநீர் கட்டுமான பூச்சில் இருக்கக்கூடிய சிறு சிறு காற்று துளைகளின் வழியாக கட்டடத்தின உள்ளே சென்று, இத்தகைய வெடிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனை சரி செய்ய வெடிப்புள்ள இடங்களை தட்டிப்பார்த்து, உறுதித் தன்மை இல்லாமல் இருந்தால், அந்தப் பகுதியை வெட்டி எடுத்து, தகுந்த 'வாட்டர் புரூபிங் ஏஜென்ட் கோட்டிங்' கொடுத்து பின்பு, சிமென்ட் கலவை வாயிலாக பூசி சரி செய்யலாம். நீர் உட்புகா வண்ணம், புதிய வகையிலான பெயின்ட் அடித்து பாதுகாக்கலாம். ஜன்னல் கம்பிகளுக்கு 'ரப் ராட்' அல்லது 'பாலிஷ் ராடு' ஆகிய இரண்டில் எது நல்லது?: -கவிராஜ்: உங்களின் வசதிக்கேற்ப, இரண்டுமே உபயோகப்படுத்தலாம். ரப் ராடை விட, பாலிஷ் ராடு நேர்த்தியாகவும், அழகாகவும், செலவு சற்று கூடுதலாகவும் இருக்கும். நான் கட்டும் புது வீட்டில்: -சுமதி: தற்பொழுது சந்தைகளில் பல கிரேடுகளில், சிமென்ட் கற்கள் கிடைக்கின்றன. நீங்கள் எந்த வகையை உபயோகப்படுத்தினீர்கள் என்று, உங்களது பொறியாளரிடம் கேட்டுக்கொள்ளவும். 'ரூப் சென்ட்ரிங்' பொதுவாக குறைந்தபட்சம், 15 தினங்களுக்கு மேல் பிரித்தால் நல்லது. கேன்டிலிவர் பால்கனியின் ஓரத்தில் 9 இன்ச் கனம் சுவர் எழுப்பலமா?: -குமார்: சிறந்த பொறியாளரை கொண்டு, இப்பணிகளை செய்ய வேண்டும். அதாவது, சரியான முறையில் கட்டட வடிவமைப்பு செய்த கேன்டிலிவர் பால்கனியில், 9 இன்ச் அகல சுவரை எழுப்பலாம். நான் புதிதாக கட்டிவரும் வீட்டுக்கு: -குமாரசாமி: கட்டடத்தில் பயன்படும் கம்பிகளை, காலர் மற்றும் வெல்டிங் முறையில் நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பது என்பதுதான் ரீபார் காலர். இவ்வாறு இணைக்கும் போது இணைப்பு மிக உறுதியானதாகவும், கம்பிகளுக்கு இடையே நெரிசல் குறைந்து, கம்பிகளின் நீளத்தை சேமிக்க முடியும். எனது வீடு கட்டி: -பழனியப்பன்: கட்டடம் கட்டும்போது நீரின் தன்மையை பரிசோதித்து, சரியான நீரை கட்டடத்தில் பயன்படுத்தும் போதும், சரியான அளவில் கவர் பிளாக் பயன்படுத்தும் போதும், கட்டடம் உறுதியானதாகவும் பிற்காலத்தில் கட்டடத்தில் கம்பிகள் துருப்பிடிக்காமல் கான்கிரீட் உதிராமல் வலுவானதாகவும் இருக்கும். -ராமலிங்கம்: துணை தலைவர்: கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம் (காட்சியா).: