உள்ளூர் செய்திகள்

எல்லாக் காய்ச்சலுக்கும் தீர்வு தரும் சூரணம்!

கடந்த சில வாரங்களாக அதிக குளிர் காரணமாக தும்மல், சளி, காய்ச்சல் உட்பட பல்வேறு உபாதைகளாஙல் பெரும்பாலானோர் சிரமப்படுகின்றனர். அதிலும் காலையில் எழுந்ததும்தொடர்ந்து தும்மல் வந்து கொண்டே இருக்கிறது. குளிர் காற்றை சுவாசிப்பதால் இருமல் தொடரந்து வருகிறது. கபம் அதிகரிக்கும் காரணத்தினால் மூட்டுக்களில் வலி எற்படுகிறது. இதற்கு கபசுர குடிநர், நிலவேம்பு குடிநீர் இரண்டிலும் தலா ஒரு ஸ்பூன் கலந்து குடிக்க வேண்டும். இரண்டு சூரணத்தையும் சேர்த்து 300 மில்லி நீர் ஊற்றி, 100 மில்லி அளவுக்கு மிதமான தீயில் வைத்து, சுண்ட காய்ச்சி, காலை, மாலை இரு வேளையும் குடிக்கலாம். தொடர்ந்து ஐந்து நாட்கள் குடிக்கும் போது, வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை தொற்றுக்கு எதிராக செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். டெங்கு,டைபாய்டு உட்பட அனைத்து விதமான காய்ச்சலும் குணமாகும். நாள்பட்ட சளி இருமல் ஆஸ்துமா சைனஸ் பிரச்னை மூக்கில் சதை வளர்ச்சி டான்சிலைட்டிஸ் போன்ற பிரச்சினை இருப்பவர்கள் சர்க்கரை நோயாளிகள் உடல் பருமன் உள்ளவர்கள் மூட்டு வலி இருப்பவர்கள் தோல் நோய் இருப்பவர்கள் வயிற்றில் பூச்சி தொந்தரவு இருப்பவர்கள் என அனைவரும் தொடர்ந்து சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று பயன் படுத்தலாம் சிறுவர்கள்களுக்கு; 15-30 மிலி பெரியவர்களுக்கு; 30-60 மிலி தினசரி ஒரு வேளை காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். டாக்டர் காமராஜ் சாமியப்பன்,மேனாள் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்,திருச்சி 0431 2300181, 94898 20113drkaamaraaj@fmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !