உள்ளூர் செய்திகள்

தற்காப்பு தரும் தடுப்பூசி

வைரஸ் தொற்றுக்கு, அதை அழிப்பதற்கு, தடுப்பூசியோ, மருந்துகளோ கிடையாது. வைரஸ் பாதிப்பால் ஏற்படும் அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை தர முடியும். ஆனால், புளு காய்ச்சலை உண்டாக்கும் வைரசிற்கு, தடுப்பூசி உள்ளது. இதை ஒவ்வொரு ஆண்டும் போட்டுக் கொள்வது நல்லது.காய்ச்சல், இருமல், சளி, உடல்வலி போன்ற அறிகுறிகளுடன் புளு காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்களில், பல வகைகள் உள்ளன. தற்போது, உலகையே ஆட்டிப் படைத்து வரும், 'கொரோனா' வைரஸ், இந்த வகையைச் சேர்ந்த புளு காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ். இது, சுவாச மண்டலத்தை நேரடியாக பாதிக்கக் கூடியது.

தடுப்பூசி

ஒவ்வொரு முறையும், புதிது புதியதாக, புளு காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் கிருமிகள் பரவுவதால், மழைக்காலம் துவங்கும் முன், அதாவது ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், புளு உண்டாக்கும் வைரசை தடுக்கும் தடுப்பூசியை போட்டுக் கொள்வது பாதுகாப்பானது. இது, 100 சதவீதம் பாதுகாப்பை தரும் என, சொல்ல முடியாவிட்டாலும், 70 சதவீதம் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும்.பிறந்து, ஆறு மாதங்கள் ஆன குழந்தைகள் முதல், எந்த வயதினரும் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், புதிய புளு தடுப்பூசி வரும். அந்த சமயத்தில், இதை போட்டுக் கொண்டால், ஆண்டு முழுவதும் புளு பாதிப்பிலிருந்து ஓரளவு பாதுகாப்பு பெற முடியும். அந்த சமயத்தில் போடாதவர்கள், கொரோனா பரவும் இந்த நேரத்திலும் போட்டுக் கொள்ளலாம். பயிற்சி பெற்ற பொது மருத்துவரிடம் சென்று, முறையாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.டாக்டர் வி. ராமசுப்ரமணியம்தொற்று நோய்கள் சிறப்பு மருத்துவர்,சென்னை044 - 4008 0300


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்