உள்ளூர் செய்திகள்

அலோபதி - சுவாச பயிற்சியால் உள்ளமும் சீராகும்

மூச்சுப் பயிற்சிகள் உங்கள் சுவாசத்தை எளிதாக்கும். சுவாசத்தின் வேகத்தை குறைக்கும். நெஞ்சு தசைகள் பலமாகும். நுரையீரலுக்கு சக்தியும், புத்துணர்ச்சியும் கிடைக்கச் செய்யும்.நாற்பது வயதான நான், கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். எனது டாக்டர் இந்த ஆண்டும் பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பூசி போடும்படி கூறுகிறார். ஊசி போட வேண்டுமா?- பக்ருதீன், நெய்வேலிஇரண்டு ஆண்டுகளுக்கு முன், பன்றிக் காய்ச்சல் உண்டாக்கும் வைரசின் வீரியம் அதிகமாக இருந்தது. இப்போது அது குறைந்து காணப்படுகிறது. 'ஸ்வைன் புளூ' எனப்படும் இக்காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவது நுரையீரலே. இந்நோயால் பாதிக்கப்பட்டவர், இருமினாலோ அல்லது தும்மினாலோ, 'ப்ளூ வைரஸ்' காற்றில் பரவும். இந்த வைரஸ் ஆண்டுக்கு ஆண்டு மாறக்கூடியது. அதனால், கடந்த ஆண்டு நீங்கள் தடுப்பூசி போட்டாலும் கூட, இந்த ஆண்டும் தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். இதனால், பன்றிக் காய்ச்சல் வருவதை தவிர்க்கலாம்.எனது குழந்தைக்கு 10 வயதாகிறது. பிறந்ததில் இருந்தே சளி, தொடர் இருமல் இருக்கிறது. டாக்டர்கள் 'பிராங்கைடிஸ்' என்னும் நுரையீரல் நோய் இருப்பதாக கூறுகின்றனர். இந்நோய் வரக் காரணம் என்ன?- அமுதவல்லி, கோவைநெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்வது, பல நோய்கள் வரக் காரணம் ஆகிவிடும். வரும் காலங்களிலாவது இளைய சமுதாயத்தினரிடம், 'நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்வது தவறு' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இந்த திருமண பந்தத்தால், பல்வேறு நுரையீரல் நோய்கள் வர, வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 'பிராங்கைடிஸ்' நோய் உள்ளவர்களுக்கு, சுவாசக் குழாய் விரிந்து காணப்படும். அதில் சளிக் கட்டிக் கொண்டு, அந்தப் பகுதியில் ரத்தக் கசிவும் ஏற்பட வாய்ப்புள்ளது.நுரையீரலின் ஒரு பகுதி மட்டும் இந்நோயினால் பாதிக்கப்பட்டால், அதை அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம். நுரையீரலின் பெரும்பாலான பகுதி பாதிக்கப்பட்டால் மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். மேலும், மூச்சுப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். சளியை வெளியே கொண்டுவர, சில எளிய பிசியோதெரபி பயிற்சிகளும், இந்நோயை குணப்படுத்தவும், நுரையீரலைப் பலப்படுத்தவும் உதவுகின்றன.நாற்பத்து ஐந்து வயதாகும் எனக்கு, கடந்த 5 ஆண்டுகளாக நுரையீரல் நோய் உள்ளது. நுரையீரல் நோய்களுக்கு, 'பல்மோனரி ரிஹேபிலிடேஷன்' எனப்படும் சுவாசப் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன என, அறிந்தேன். நான் எவ்வித பயிற்சிகளை செய்ய வேண்டும்?- ஞான தங்கவேல், சிவகங்கைநம் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க, உடற்பயிற்சிகள் மிக முக்கியம். அதேபோல, நுரையீரல் நோய்களுக்கு, சுவாசப் பயிற்சிகள் மிகவும் இன்றியமையாதவை. மூச்சுப் பயிற்சிகள், உங்கள் சுவாசத்தை எளிதாக்கும்; சுவாசத்தின் வேகத்தை குறைக்கும்; நெஞ்சு தசைகள் பலமாகும். மேலும், நுரையீரலுக்கு சக்தியும், புத்துணர்ச்சியும் கிடைக்கச் செய்யும்.சுவாசப் பயிற்சிகளில் பல உள்ளன. அதில் முக்கியமானதான, 'டயாப்ராக்மேட்டிக்' மூச்சுப் பயிற்சி செய்யும் முறை இதோ:* சாவகாசமாக அமர்ந்து, உங்கள் தோள்ப்பட்டைகளைத் தளர்த்திக் கொள்ளவும்.* மூக்கின் வழியே மெதுவாக மூச்சை உள்ளே இழுக்கவும். அதே நேரத்தில், வயிற்றுப் பகுதியை வெளியே தள்ளுவது போல செய்யவும்.* வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை இறுக்கியபடி, உதடுகளைக் குவித்த வண்ணம் மெதுவாக மூச்சை வெளியிடவும். இது ஒரு உதாரணமே. இதுபோன்று பல பயிற்சிகள் உள்ளன. அவற்றை முறையாக கற்றுக் கொண்டு, தொடர்ந்து தினமும் செய்வதன் மூலம், உங்கள் நுரையீரல் விரிவடைவதுடன், நோயும் குணமடைகிறது; உங்கள் நுரையீரலும் புத்துணர்ச்சி பெறுகிறது.டாக்டர் எம். பழனியப்பன்,94425 24147


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்