உள்ளூர் செய்திகள்

அலோபதி: ஈறு தெரிய சிரிப்பவரா நீங்கள்?

குறைந்த அளவே குறைபாடு இருப்பவருக்கு, பற்களில் நிலையான 'கிளிப்' அணிந்து, நவீன மினி ஸ்குரூ உதவியுடன், அறுவை சிகிச்சை இன்றி சரிசெய்யலாம். ? என் தாத்தாவிற்கு பல் இல்லை. பல் செட் வைத்தால், மிகவும் வலிப்பதாக கூறுகிறார். பல் டாக்டரோ தாடை எலும்பு சீராக இல்லை என்கிறார். என்ன செய்வது?தாடை எலும்பு சீராக இருப்பதற்கு, வெகுநாட்களுக்கு முன் விழுந்த பற்கள், சமீபத்தில் விழுந்த அல்லது பிடுங்கப்பட்ட பற்கள் என்று, இருவிதமாக பிரிக்கலாம். பற்கள் வெகுநாட்களுக்கு முன்பே எடுக்கப்பட்டு இருந்தால், தாடை எலும்பு வேகமாக கரைந்து, அந்த இடம் பள்ளமாக இருக்கும். சமீபத்தில் விழுந்த பற்களின் இடம் மேடாக இருக்கும். இதைத் தவிர, தாடை எலும்பு அதிகம் கரைந்துள்ள இடங்களில், கத்தி போன்று கூர்மையாக இருக்கும். இவ்வாறு இருந்தால், பல் செட் வைக்கும் போது, மிக லேசான ஈறுகள் மற்றும் கூர்மையான தாடை எலும்பில் அழுத்துவதால், வலி உண்டாகலாம். இதைத் தவிர, அதிக ஈறு வளர்ச்சியுள்ள தாடை எலும்பில் கூட, பல் செட் வைத்தால், ஈறுகளை அழுத்தி வலி வரலாம். தாடை எலும்பு வேகமாக கரைந்து, மிகக் குறைவான உயரத்தில் இருந்தால், பல் செட் கீழே உள்ள வாயின் திசுக்கள், நாக்கின் கீழே அழுத்தி, வலியை உண்டாக்கும். இவ்வாறு பிரச்னை இருந்தால், தாடை எலும்பை சிறிய அறுவை சிகிச்சை மூலம் சீராக்கி, பிறகு பல் செட் அணியலாம்.எனக்கு 35 வயது. சிரிக்கும் போது, மேல்தாடையில் ஈறுகள் தெரிகின்றன. இதே மாதிரி, என் 8 வயது மகளுக்கும், தெரியத் துவங்குகிறது. இதை சரிசெய்ய முடியுமா?சிலருக்கு, மேல் தாடையில் வளர்ச்சி அதிகமாக இருப்பதால், சிரிக்கும்போது, பல்லுக்கு மேல் இருக்கும் ஈறுகள் தெரியக் கூடும். இவ்வாறு இருப்பது, சில குடும்பங்களில் பரம்பரையாக வரலாம். இதைத் தவிர, வாய் வழியாக சுவாசிக்கும் குழந்தைகளுக்கு, மேல் தாடை கீழே இறங்கக் கூடும். ஏழு வயது வரை, குழந்தைகளை பல் சீரமைப்பு நிபுணரிடம் அணுகி, தாடை வளர்ச்சி சரியாக இருக்கிறதா என, ஆலோசனை பெற வேண்டும். இப்பருவத்தில் தாடை குறைபாடுகளை கண்டுபிடித்தால், அவற்றை எளிதாக சரிசெய்ய முடியும். அதைத் தவிர, வாய் வழியாக சுவாசிக்கும் குழந்தைகளுக்கு, சரியான சிகிச்சை மூலம், மூக்கு வழியாக சுவாசிப்பவர்களாக மாற்ற முடியும். 14 வயதுக்கு மேல், இவ்வாறு சிரிக்கும்போது ஈறு தெரிந்தால், எந்த அளவு குறைபாடு இருக்கிறதோ, அதைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும். குறைந்த அளவே குறைபாடு இருப்பவருக்கு, பற்களில் நிலையான 'கிளிப்' அணிந்து, நவீன மினி ஸ்குரூ உதவியுடன், அறுவை சிகிச்சை இன்றி சரிசெய்யலாம். தாடை வளர்ச்சி அதிகமாக இருந்தால், இதை தாடை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம்.- டாக்டர் எஸ்.முத்துராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !