உள்ளூர் செய்திகள்

அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கும் நறுமண் ஷியாட்சு மசாஜ்!

நம் நினைவாற்றல், கவனம், மொழியை கற்பது, பகுத்தறிவது, தீர்மானிப்பது, சிந்திப்பது போன்ற தினசரி செயல்பாடுகளை 'காக்னிசன்ட் பங்ஷன்' எனப்படும் அறிவாற்றல் செயல்பாடு தான் தீர்மானிக்கிறது. இளம் வயதினரின் காக்னெடிவ் செயல்பாடுகளை பரிசோதிக்கும் ஆய்வு ஒன்றை செய்துள்ளோம். இந்த ஆய்வில், 17 -முதல் 19 வயது வரை உள்ள 100 இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களை தேர்வு செய்யக் காரணம், பல புதிய விஷ யங்களை கற்றுக் கொள்ளும் இந்த வயதில், மூளையில் புதிய நியூரான்கள் உருவாகும். நினைவாற்றல் அதிகரிக்கும். திறமையாக செயல்படும் இளைஞர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதால், அறிவாற்றல் செயல்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அறிவாற்றல் செயல் திறனை அதிகரிக்க, இயற்கை மருத்துவத்தில் நறுமண ஷியாட்சு மசாஜ் எந்த அளவு பயன்படுகிறது என்பதை அறியவே இந்த ஆராய்ச்சியை செய்தோம். தலைப் பகுதியில் உள்ள அக்குபங்சர் புள்ளிகளில் தரப்படும் மசாஜ் இது. நறுமண எண்ணெய்களை உபயோகித்து குறிப்பிட்ட புள்ளிகளில் 10 நிமிடம் மசாஜ் செய்யும் போது, அது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர மைக்ரேன், குமட்டல், மயக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கும் தீர்வு தருகிறது. ஆராய்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இந்த மாசாஜை செய்ததில் அவர்களின் அறிவாற்றல் செயல்திறன் மேம்பட்டதை உறுதி செய்ய முடிந்தது. டாக்டர் தீபா யோககேந்திரன், இயற்கை மருத்துவர், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரி, சென்னை 044 26222682sakshaayaan@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்