உள்ளூர் செய்திகள்

"சம்மணமிட்டு அமர்ந்தால் மூட்டுவலி

* மூட்டுவலியால் மூன்று ஆண்டுகளாக அவதியுறுகிறேன். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செலவு மருத்துவமனைகளில் வேறுபடுகிறதே. நான் என்ன செய்வது?இந்தியாவில், தற்போது மூட்டு மாற்று சிகிச்சையின் கட்டணம், சரியாக நிர்ணயிக்கப் படவில்லை. மேல்நாடுகளில் உள்ள, தலைசிறந்த மையங்களின் மூட்டு மாற்று சிகிச்சையின் வெற்றி, 98 சதவீதம். அதற்கு காரணம் அங்கு பின்பற்றப்படும் வழிமுறைகள். அறுவை சிகிச்சை அரங்கின் கட்டட அமைப்பு, அங்கு பின்பற்றப்படும் ஒழுங்குமுறைகள், அரங்கு, நோயாளிக்கான வெப்பநிலை, அறுவை சிகிச்சை பாகங்களுக்கு கொடுக்கப்படும் நீர்புகா உறைகள் போன்றவற்றை, தரமாக செய்வதில் அதிக செலவாகிறது.இதுமட்டுமின்றி இந்திய செயற்கை மூட்டு, வெளிநாட்டு செயற்கை மூட்டு என, பல வேறுபாடுகள் உள்ளன. அனைத்தையும் தரமாக கடைபிடித்து, உயர்தரத்தில் செய்யும்போது, வெற்றி விகிதம் மேல்நாடுகளுக்கு இணையாக அமைகிறது. தேசிய அளவில், என்.ஏ.பி.எச்., அங்கீகாரம் பெற்ற மருந்துவமனைகளில், கண்டிப்பாக நல்ல தரம் எதிர்பார்க்கலாம். தரத்திற்கும், அறுவை சிகிச்சை செய்யும் நிபுணரின், மூட்டு மாற்று சிகிச்சையில் உள்ள சிறப்பு அனுபவத்திற்கும் முதலிடம் கொடுத்து, செலவைப் பற்றி விவாதிக்கலாம்.* நாற்பது வயதான நான், சம்மணமிட்டு அமர்ந்தால் முழங்கால் மூட்டில் அதிக வலி உள்ளது. என்ன செய்வது?சம்மணமிட்டு உட்காரும்போது வலி உண்டாவது, மாடிப்படி ஏறும்போதும், இறங்கும்போதும் வலி ஆகியவை மூட்டு தேய்மானத்தின் ஆரம்ப கால அறிகுறிகள். மூட்டிற்கு என, குறிப்பிடப்பட்ட சில பயிற்சி முறைகள் தினமும் செய்து வந்தால், தசைகளின் கட்டுப்பாடு அதிகமாகி, வலியின் தன்மை குறையும். Knee Support, VMO Exercise போன்ற சிகிச்சை முறைகள், உங்களுக்கு நன்மை தரும். நீங்கள் டாக்டரிடம், பரிசோதனை செய்து தக்க ஆலோசனைகள் பெற்று, சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,மதுரை. 98941 03259


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்