காலை உணவை தவிர்ப்பதால் நல்லது நடக்கும்!
சாப்பிடும் உணவில் உள்ள மாவுச் சத்து, 'கிளைக்கோஜன்' என்ற வேதிப் பொருளாக மாறி, கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. பல மணி நேரம் தொடர்ந்து சாப்பிடாமல் இருக்கும் நேரங்களில், இந்த கிளைக்கோஜன் சக்தியாக மாறி உடம்பிற்கு வலு தரும். இது மிகக் குறைந்த அளவான 250 - 300 கிராம் வரை மட்டுமே சேமிக்கப்படும். கிளைக்கோஜன் தீர்ந்து போனால், உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு எரிந்து சக்தி தரும். இரவு உணவுக்கும், காலை உணவிற்கும் இடையில் இருக்கும், 10 மணி நேரம் இப்படித் தான் உடலுக்கு சக்தி கிடைக்கிறது.காலை உணவு சாப்பிடாமல் இருந்தால், லேசான சோர்வு இருந்தாலும், அதிகப்படியான கொழுப்பை எரிப்பது தொடர்ந்து நடக்கும் போது, உடல் பருமன் குறையும்; இடுப்பைச் சுற்றியுள்ள அதிகப்படியான சதை குறையும்.பல வெளிநாட்டு மருத்துவ பல்கலைக்கழகங்களில் செய்த ஆய்வுகள், காலை உணவைத் தவிர்ப்பதால், மாரடைப்பு, சர்க்கரைக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம் வருவதாக சொல்கிறது. இவை அனைத்தும், தினசரி மது பழக்கம், சிகரெட், துாக்கமின்மை, ஏற்கனவே பல உடல் கோளாறுகள் இருப்பவர்களிடம் செய்யப்பட்டவை. அத்துடன் இரவில் தாமதமாக துாங்கி, தாமதமாக எழுந்து, உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் தவறான உணவு, வாழ்க்கை முறை உள்ளவர்கள்; காலை உணவையும் தவிர்ப்பவர்கள். இவர்களுக்கு தான் பிரச்னை வருகிறது. ஆரோக்கியமாக, முறையான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பவர்களிடம் இது போன்ற ஆய்வுகள் இதுவரை செய்யப்படவே இல்லை. முறையான வாழ்க்கையை பின்பற்றுபவர்கள், அவரவர் உடலின் தேவையை அறிந்து, அதற்கேற்ப இருந்தால் எந்தப் பிரச்னையும் வராது.- நேஷனல் ரிசர்ச் பவுண்டேஷன், தென் கொரியா