அர்டிகேரியாவிற்கு தீர்வு தரும் ஆயுர்வேதம்!
ஷீ த பித்தம் என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்படும் 'அர்டிகேரியா' எனப்படுவது, தோலில் ஏற்படும் ஒருவித அலர்ஜி போன்ற உபாதை. எதிர்பாராமல் ஏற்பட்டு தானாகவே குணமாவதும் உண்டு. பல ஆண்டுகளாக குணமாகாத அர்டிகேரியாவும் உண்டு.ஐ.டி., நிறுவனத்தில் பணி செய்யும் 32 வயது பெண்மணி, இரண்டு மாதங்களுக்கு முன், அர்டிகேரியா பிரச்னைக்காக மருத்துவ ஆலோசனைக்கு எங்களிடம் வந்தார். பலவிதமான மருத்துவ முறைகளை முயற்சி செய்தும், நான்கு ஆண்டுகளாக குணம் தெரியவில்லை. அரிப்பு, தடிப்பு, எரிச்சலால் சிரமப்படுவதாகவும், ஏதாவது தீர்வு கிடைக்குமா என்று ஒருவித விரக்தியுடனும் கேட்டார்.அறிகுறிகள் தீவிரமாகும் போது, அலர்ஜியை குறைக்கும் அலோபதி மருந்து எடுத்துக் கொள்வதாகவும், அந்த மருந்து சாப்பிடும் சமயங்களில், நாள் முழுதும் துாக்க கலக்கத்துடன் உணர்வதாகவும், இந்த மந்த தன்மையில் இருந்து விடுபடுவதற்கு வழியே இல்லையா என்றும் கேட்டார்.நோயின் தன்மை, அலுவலக வேலை, உணவு பழக்கங்கள் என்று அனைத்தையும் கேட்ட பின், மூன்று வாரத்திற்கு எண்ணெய் பதார்த்தங்கள், இனிப்புகளை தவிர்த்து, உணவில் புளி, காரத்தை குறைக்கச் சொன்னோம். பச்சை மிளகாய் சேர்ப்பதை அறவே நிறுத்தச் சொன்னோம்.ஹரித்ரா காண்டம், சுதர்சன சூரணம் மாத்திரை, பட்டோலாதி கஷாயம் போன்றவற்றை உள்மருந்தாக கொடுத்தோம். எங்களின் ஆலோசனைப்படி பத்திய உணவு, மருந்துகளை சாப்பிட்ட 21 நாட்கள் கழித்து மீண்டும் வந்த போது, அவர் முகத்தில் மகிழ்ச்சி.பத்திய உணவும், மருந்தும் தோல் அரிப்பை வெகுவாக குறைத்து விட்டதாகவும், பிரச்னை வரும் சமயங்களில் சாப்பிடும் அலோபதி மருந்துகளை இந்த நாட்களில் எடுக்கவில்லை. அதனால், இயல்பாக வேலைக்கு செல்ல முடிந்ததாக கூறினார். அர்டிகேரியாவுக்கு பத்திய உணவு, மருந்துகளால் இவரை போன்று சிலருக்கு குணம் தெரியும். வேறு சிலருக்கு இத்துடன் சேர்த்து, சினேஹனம் செய்து, வமணம், விரேச்சனம் போன்ற பஞ்ச கர்ம சிகிச்சை தேவைப்படும். இதற்கான நிவாரணம் சில வாரங்களில், சில மாதங்களில் தெரியும்.அர்டிகேரியா முழுதும் குணமாக, நோய் எதிர்ப்பு தன்மையை சரி செய்வது, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை பின்பற்றுவது, ஆண்டிற்கு ஒரு முறை பஞ்ச கர்ம சிகிச்சை செய்வதும் அவசியம். டாக்டர் சுதீர் ஐயப்பன், டாக்டர் மீரா சுதீர்,ஸ்ரீஹரியம் ஆயுர்வேதம், சென்னை86101 77899sreehareeyam.co.in