ஆயுர்வேத எனர்ஜி பானம்!
சீரகம், ஓமம், லவங்கம், சுக்கு, மிளகு தனித்தனியாக ஒரே அளவில் எடுத்து, வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் பட்டை, ஏலக்காய் சிறிதளவு சேர்த்து சூடு ஆறியதும், அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற பொருட்கள் ஒவ்வொன்றும் 50 கிராம் என்றால், பட்டை, ஏலக்காய் 5 கிராம் எடுத்தால் போதும். வறுத்த பொடியை கண் ணாடி பாட்டிலில் ஈரம் படாமல் வைக்க வேண்டும். இதிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு முறை அரை டீஸ்பூன் எடுத்து, அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து, அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து, டீக்கு பதிலாக குடிக்கலாம். இந்த பானத்தால் நாள் முழுதும் செரிமானம் நன்றாக இருக்கும்; உடல் வெப்பத்தை சமமாக வைக்கும்; தேவையற்ற உடல் கழிவுகளை வெளியேற்றி விடும். ரத்தத்தை சுத்தம் செய்யும். எனர்ஜியை நாள் முழுதும் உணரச் செய்யும். டாக்டர் ரேச்சல் ரெபேக்கா, ஆயுர்வேத மருத்துவர், பிரயத்தனா ஆயுர்வேதா கிளினிக், சென்னை 94895 50936 De.raichalprayathna@gmail.com