நச்சு தன்மையை போக்கும் துளசி டீ!
துளசியின் மருத்துவ குணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த துளசி வனம் அமைத்துள்ளோம்.சுற்றுச்சூழலில் உள்ள மாசுக்களை சுத்தம் செய்து, அதிக ஆக்சிஜனை உருவாக்கும் திறனுடைய துளசி செடிகள் இருந்தால், உடல் உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்பட்டு புத்துணர்வு பெறுவதாக ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.தினசரி பயன்பாட்டிற்கு வீடுகளில் வளர்க்கப்படும் ராம துளசி, இனிப்பான சுவையில் இருக்கும். இயற்கையான உயிரி மூலக்கூறுகளான ஆன்டி ஆக்சிடென்ட் செயல்பாடு அதிக அளவில் இருக்கும். தினமும் துளசி இலைகளில் 'டீ' தயாரித்து குடிப்பதால், உடலில் உள்ள நச்சுத் தன்மை வெளியேறுகிறது; வைரஸ், பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.தொழிற்சாலை, வாகனங்களில் இருந்து வெளியேறும் வேதிப் பொருட்கள், கடினமான தாதுக்களின் நச்சுகளில் இருந்து உடல் உள்ளுறுப்புகள், திசுக்களை பாதுகாக்கிறது. உடலளவில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. துளசியில் உள்ள பீட்டா கரோடின், செல்களில் ஏற்படும் சிதைவுகளை சரி செய்யும் திறன் கொண்டது.மன அழுத்தத்தை குறைப்பதில் துளசிக்கு பெரும் பங்கு உள்ளது. 'இயுஜினோல்' என்ற வேதிப் பொருள் திரவ வடிவில் துளசியில் உள்ளது. துளசி சாறை தினமும் குடிப்பதால், போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழுத்தத்தையும், அழற்சியையும் குறைக்கிறது. சுவாசக் கோளாறுகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.டாக்டர் வி.சுரேந்திரன், கேன்சர் மருத்துவ ஆலோசகர், அடையாறு கேன்சர் மையம், சென்னைடாக்டர் ரூபா ரெட்டி, திட்ட ஒருங்கிணைப்பாளர், பரம்பரா அமைப்பு, சென்னை