உள்ளூர் செய்திகள்

கலோரி குறைப்பும், கருப்பை ஆரோக்கியமும்!

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று பல இளம் பெண்கள், 'ஜிம்'மிற்கு சென்று, பல மணி நேரம் தீவிரமாக உடற்பயிற்சி செய்கின்றனர். எடை தூக்குவது, கனமான பொருட்களைத் தள்ளுவது என்று தீவிரமாக உடற்பயிற்சி செய்கின்றனர். இதனால், கலோரி குறைந்தாலும், கருப்பை தொடர்பான சிக்கல்களை ஏற்படுத்தலாம்.போதுமான அளவு கலோரி உடலில் இல்லாமல் இருக்கும் இளம் பெண்களுக்கு, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் மாதவிடாய் வராமல் இருக்கும். இது கரு தரிப்பதையும், தாம்பத்திய உறவையும் பாதிக்கலாம். அதே நேரத்தில், உடல் பருமன் அதிகம் உள்ள பெண்கள் எடையைக் குறைக்க, தீவிரமாக உடற்பயிற்சி செய்தால், கரு முட்டை உற்பத்தியை துாண்டும் 'ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்' சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.இதனால், கரு தரிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். திருமணம் ஆகாத இளம் பெண்கள் செய்யும் தீவிர உடற்பயிற்சி, பல நேரங்களில் மாதவிடாய் சுழற்சியில் சிக்கலை ஏற்படுத்தி, பின்னாளில் கரு உண்டாவதில் பிரச்னையை ஏற்படுத்தலாம். குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் இருக்கும் பெண்கள், தீவிர உடற்பயிற்சியை தவிர்ப்பது பாதுகாப்பானது.- கைனக்காலஜி இதழ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்