உள்ளூர் செய்திகள்

கோழி பண்ணையால் ஆஸ்துமா வருமா?

நச்சுப் பொருள் மற்றும் கழிவுப் பொருட்கள் அதிகம் வெளியாகும் தொழில்களான, கோழிப்பண்ணை, பஞ்சாலைகளில் வேலை பார்ப்போருக்கு, நுரையீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதற்காக நாம் கவலைப்படத் தேவையே இல்லை.என் வயது 35. ஓராண்டாக மூச்சுத் திணறல் உள்ளது. இப்பிரச்னை உள்ளவர்கள், பால் அருந்தக் கூடாது என்று கூறுகின்றனரே... இது சரியா? - கண்ணன், விருதுநகர்பால் மூச்சுத் திணறலை அதிகரிக்காது. ஆனால், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர், மோர் போன்றவற்றை மிகக்குளிர்ந்த நிலையில் அருந்தும்போது மட்டுமே மூச்சுத் திணறல் அதிகரிக்கும். அதனால், நீங்கள் தினமும் கண்டிப்பாக பால் அருந்தலாம். அதேபோல, குழந்தைகள் பால் மற்றும் சாக்லெட் உண்பதால் சளி, இருமல், மூச்சுத் திணறல் வரக்கூடும் என்று பலர் கருதுகின்றனர். இது ஒரு தவறான கருத்து. சாக்லெட்டில் உள்ள, 'கோகோ' என்ற பொருளால், அலர்ஜி ஏற்படும் குழந்தைகள் மட்டுமே, சாக்லெட்டை தவிர்க்க வேண்டும். கோகோ அலர்ஜி இல்லாத குழந்தைகள் சாக்லெட் உண்பது தவறல்ல. ஆகையால், பால் மற்றும் சாக்லெட், கண்டிப்பாக இருமல் மற்றும் மூச்சுத் திணறலை உண்டாக்காது. நான் பத்து ஆண்டுகளாக, கோழிப் பண்ணையில் பணியாற்றுகிறேன். என்னுடன் வேலை பார்க்கும் பலருக்கு ஆஸ்துமா உள்ளது. எனக்கும் ஆஸ்துமா வராமல் இருக்க, என்ன செய்ய வேண்டும்? - தியாகு, கோவைதொழில் சார்ந்த நோய்கள் பல உள்ளன. இதை, 'ஆக்குபேஷனல் லங் டிசீஸ்' என்பர். நச்சுப் பொருள் மற்றும் கழிவுப் பொருட்கள் அதிகம் வெளியாகும் தொழில்களான, கோழிப்பண்ணை, பஞ்சாலைகளில் வேலை பார்ப்போருக்கு, நுரையீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதற்காக நாம் கவலைப்படத் தேவையே இல்லை. உங்கள் பண்ணையின் சுற்றுச் சூழலை சிறிது மாற்றி அமைத்தாலே போதும். அதாவது, கோழிப் பண்ணைக்குள் நுழையும்முன்பே, மூக்கை மூடிக்கொள்ளுமாறு முகமூடி அணிந்து கொள்ள வேண்டும். காற்றோட்டமான சூழல் மற்றும் நச்சுக்காற்றை வெளியே தள்ளும், 'எக்ஸ்ஹாஸ்ட் பேன்' இருப்பது முக்கியம். ஈரம் அதிகம் இல்லாத சுகாதாரமான சூழலாக பார்த்துக் கொள்ளுங்கள். பண்ணைக் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துங்கள். காய்ச்சல், சளி, இருமல் வந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள். ஆண்டுக்கு ஒருமுறை உங்கள் நுரையீரல் திறனை கண்டறியும் ஸ்பைரோமெட்ரி பரிசோதனையை செய்து, உங்களுக்கு நுரையீரல் நோய் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நாற்பத்து ஐந்து வயதான எனக்கு, சளி, இருமல் எதுவும் இல்லை. என் இடது காதுக்கு பின்னால் சிறு கட்டி உள்ளது. இது டி.பி., கட்டியாக இருக்குமா? - கார்த்திக், சிவகாசிகாதுக்குப் பின்னால் கட்டி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அது டி.பி., மற்றும் கேன்சர் கட்டியாக இருக்க வேண்டும் என்பதில்லை. கழுத்து, தொண்டை, காது, வாய் பகுதியில் நோய் தொற்று இருந்தாலும், காதுப்பகுதியில் சிறு கட்டி வரக்கூடும். மேலும் நம் உடம்பு, எந்த ஒரு நோய் கிருமியால் தாக்கப்பட்டு இருந்தாலும் கூட, நெறிகட்டிக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. இது சிறுகட்டியாக கழுத்துப் பகுதியில் காணப்படும். நீங்கள் உடனடியாக, ஒரு காது மூக்கு தொண்டை நிபுணரை அணுகுங்கள். தேவைப்பட்டால், 'பயாப்சி' பரிசோதனை செய்து, அந்த கட்டி என்னவென்று ஆராய்ந்து, அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.டாக்டர் எம். பழனியப்பன்,94425 24147


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்