உள்ளூர் செய்திகள்

திருமணம் செய்யலாமா?

வி.சித்ரா, விருதுநகர்: என் மகளின் வயது 22. எக்கோ பரிசோதனையில், 'வால்வுலர் பி.எஸ்' என வந்துள்ளது. அவளுக்கு திருமணம் செய்யலாமா?இதயத்தின் வலதுபுறம் உள்ள ஒரு வால்வு தான், 'பல்மோனரி வால்வு!' இந்த வால்வில் சுருக்கம் ஏற்பட்டால், அதை, 'பல்மோனரி ஸ்டேனோசிஸ்' - பி.எஸ்., என்பர். இது பிறவியில் இருந்தே இருக்கும் ஒரு வியாதி. இதற்கு, அறுவை சிகிச்சையின்றி, பலூன் சிகிச்சை மூலமே பூரண குணம் அளிக்க முடியும். இச்சிகிச்சைக்கு பின், உங்கள் மகளுக்கு நீங்கள் தாராளமாக திருமணம் செய்து வைக்கலாம். இதனால், அவரது திருமண வாழ்விலோ, கருத்தரிப்பிலோ எந்த பாதிப்பும் ஏற்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்