இருமும் போது நெஞ்சு வலியா...
கணேசன், தேனி: என் வயது 25. சில நாட்களாக மூச்சை இழுத்து விடும் போதும், இருமும்போதும், வலது பக்க நெஞ்சு பகுதியில் வலி உள்ளது. இதற்கு என்ன காரணம்?நீளமாக மூச்சுவிடும்போதும், இருமும்போதும் நெஞ்சுவலி, வலது பக்கம் ஏற்பட்டால் அதற்கு முக்கிய காரணம் 'பிளேரஸி'யாக இருக்கும். நுரையீரலை சுற்றி இருக்கும் அதன் மேலுறையை, 'பிளேரா' என்பர். இதில் நோய் தொற்று, வைரஸ், பாக்டீரியா, பூஞ்சாண பாதிப்பு அல்லது டி.பி.,நோய் தொற்றாக இருக்கலாம். இதற்காக பயப்படத் தேவையில்லை. உங்கள் டாக்டரிடம் சென்று, தகுந்த பரிசோதனை செய்து மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.