சர்கார்டியன் ரிதம் மாறுபடலாம்
இன்றைய நவீன உலகத்தில் துாக்கமின்மை என்பது பொதுவான விஷயமாக உள்ளது.வயதிற்கு ஏற்றாற்போல் ஒரு நாளில் ஆறு - எட்டு மணி நேரம் துாக்கம் முக்கியமானது. துாங்க முயற்சிப்பதில் வரும் இடையூறுகள் அல்லது துாங்கிய பின்பு வரும் இடையூறுகள் இருந்தால் அதனை துாக்கமின்மை என்று சொல்லலாம். இரவு படுக்கச் சென்றதில் இருந்து மறுநாள் காலை வரை, நிலையான ஆழ்ந்த துாக்கம் இல்லாவிட்டால், தலைவலி, உடல் சோர்வு, மந்தநிலை, பகல் நேரத்தில் அன்றாட வேளையை இயல்பாக செய்ய முடியாமல் போவது, உட்பட பல உடல் பாதிப்புகள் எற்படலாம்.துாக்கமின்மைக்கான காரணங்கள்முறையற்ற உணவுப் பழக்கம், எண்ணெயில் பொரித்த உணவுகள்அதிகம் சாப்பிடும்போது, செரிமானக் கோளாறால் சரியான துாக்கம் இருக்காது. சிகரெட், மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு முறையான துாக்கம் இருக்காது. சிலர் உடல் பாதிப்புக்கு எடுத்து வரும் மருந்துகளினால் துாக்கமின்மை ஏற்படும் உடலில் வலி இருக்கும் போது ஒரு மனிதன் துாங்குவதற்கு வசதியான சூழல் கிடைப்பது இல்லை. அதை மீறி தூங்கினால் உறக்கத்தின் போது அந்த காயத்தின் மீது உருண்டு படுத்தாலோ அல்லது உராய்வு ஏற்பட்டாலோ உறக்கம் கெட்டுப்போகிறது.மாதவிடாய் காலம், மற்றும் மாதவிடாய் முடிவடையும் காலத்தில் சிலருக்கு நல்ல தூக்கம் இல்லாமல் அவதிப்படுவார்கள். பயம், பதற்றம், மன அழுத்தம், பணிச்சுமை, பண நெருக்கடிகள், குடும்ப பிரச்னை, தாம்பத்ய வாழ்க்கையில் அதிருப்தி போன்றவற்றால் துாக்கம் சரிவர இல்லாமல் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும்.ஸ்கீசொபிறீனியா, என்கிற மனநல பாதிப்பு இருந்தால் துாக்கம் இருக்காது.உலகம் இயங்குவதற்கு ஒரு நாளைக்கு 24 மணிநேரம் உள்ளது போல் நம் உடலில் இருக்கும் உறுப்புகள் இயங்குவதற்கும் கால நேரம் உள்ளது. அதற்கு பெயர் சர்காடியன் ரிதம்.இதனால் சர்காடியன் ரிதம் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டு தேவையில்லாத உடல் பாதிப்புகளைஏற்படுத்தும். துாக்கம் எளிதில் வருவதற்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவத்தில் சில சிம்பிள் மருத்துவம் உள்ளது. நீர் சிகிச்சையில் பாத குளியல் எடுக்கலாம். இரவு படுக்கப் போகும் முன்பு ஒரு வாளியில் பொறுக்கும் அளவில் வெந்நீர் எடுத்து அதில் பாதத்திலிருந்து கெண்டைக்கால் வரை 20 நிமிடம் வைத்திருப்பது பலன் தரும். படுக்க செல்வதற்கு முன் சுவாசப் பயிற்சி, தியானம் செய்யலாம். மன நிம்மதி கிடைக்கும்.