உள்ளூர் செய்திகள்

ஆயுள், ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யும் கொலோஜென்!

சமீப ஆண்டுகளில், 25, 35 வயதிலேயே, தோல் சுருக்கம் ஏற்பட்டு, வயதானதைப் போன்ற தோற்றத்துடன் இருக்கும் பலரையும் சமீப காலமாக அதிகம் பார்க்க முடிகிறது. வயதாக ஆக தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது இயல்பு. இதற்கு காரணம், நம் உடலில் இயற்கையாக உற்பத்தியாகும், கொலோஜெ ன் என்கிற புரதம், படிப்படியாக குறைய ஆரம்பிப்பது தான்; இளம் வயதில், இதன் உற்பத்தி குறைந்து, தோல் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு காரணம், மன அழுத்தம். இதற்கு காரணமான, 'கார்ட்டிசால்' ஹார்மோன் உற்பத்தி அதிகமாகும் போது, கொலோஜென் உற்பத்தியைமறைமுக மாகக் குறைத்து விடுகிறது. இதை தவிர்க்க ஒரே வழி, இயற்கையான முறையில் கொலோஜென் உற்பத்தியை, உணவு வாயிலாக அதிகரிப்பது. தாவர உணவுகள் சார்ந்த புரதங்களை சாப்பிடுவதை விட, விலங்குகள் மூலம் கிடைக்கும் புரதங்களான மீன், கோழி இறைச்சி, முட்டை சாப்பிடும் போது, இவற்றில் உள்ள புரதம் கொலோஜென் உற்பத்தி யை அதிகரிக்க செய்கிறது. அசைவ உணவுகளை தினமும் சாப்பிடுவோர், அத்துடன் சேர்த்து, விட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவையும் சேர்த்து கொண்டால், கொலோஜென் உற்பத்தி அதிகரிக்கும். இத்துடன் முழு தானியங்கள், பருப்பு வகைகள், கால்ஷியம், மெக்னீஷியம், இரும்புச் சத்துள்ள தண்டுக்கீரை, குறிப்பாக பசலைக்கீரையை அதிக அளவில் சாப்பிடுவதும், கொலோஜென் உற்பத்திக்கு வழி செய்யும். அதிக வேதிப்பொருட்கள் உள்ள கிரீம்கள், சோப்புகளை பயன்படுத்தும் போது, இயல்பாக இருக்கும் கொலோஜென் உற்பத்தியை தடுத்து விடும். இதற்கு பதிலாக, வாரத்தில் இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்து, பாசிப்பருப்பு, கடலைமாவு போன்ற இயற்கையான பொடிகளை தேய்த்துக் குளிப்பது, மஞ்சள், கடலை மாவு, சந்தனம், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தேய்ப்பது சுருக்கங்களை நீக்கும். இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், பொடித்த வெள்ளைச் சர்க்கரையை சேர்த்து, முகத்தில் தேய்த்து சிறிது நேரத்திற்கு பிறகு மெதுவாக குளிர்ந்த நீரால் கழுவினால், கொலோஜென் உற்பத்திக்கு உதவும். நீராகாரங்களை அதிகம் சாப்பிடுவது, பழைய சாதம், ஒமேகா 3 பேட்டி ஆசிட், சியா, ஆலி விதை கள், அக்ரூட் போன்றவற்றை தினசரி உணவில் சேர்ப்பதும் அவசியம். கொலோஜென் உற்பத்தி சீராக இருப்பது, வெறும் பொலிவுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிக்க செய்யும். டாக்டர் தீபா யோகேந்திரன், இயற்கை மருத்துவர், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை, சென்னை. 044 2522 2682sakshaayaan@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !