உள்ளூர் செய்திகள்

பற்களுக்கு இடையே உணவு மாட்டிக் கொள்கிறதே

* எனக்கு உணவு சாப்பிடும்போது, பற்கள் இடையே உணவுத் துகள்கள் மாட்டிக் கொள்கிறது. அந்த இடத்தில் ஈறுகளில் வீக்கமும், வலியும் வருகிறது. பல்குச்சி அல்லது 'பின்' உபயோகப்படுத்தி, அத்துகள்களை அகற்றி வருகிறேன். இதை எவ்வாறு சரிசெய்யலாம்? பற்களுக்கு இடையில் இயற்கை யிலேயே இடைவெளிகள் இருக்கும். ஆனால் சில நேரங்களில் பல்வரிசை சீராக இல்லையென்றாலோ, பக்கத்துக்கு பற்களின் அமைப்பினாலோ, இந்த இடைவெளி அதிகமாகும். அப் போது உணவு அந்த இடங்களில் மாட்டிக் கொள்ளும். இதனால் கிருமிகள் சேர்ந்து, ஈறுகளில் வலியும், வீக்கமும் ஏற்படும். பல் குச்சி அல்லது பின் பயன்படுத்துவதால், இந்த இடைவெளி அதிகமாகும். கண்டிப்பாக அவற்றை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, 'டென்டல் பிளாஸ்' பயன்ப டுத்தலாம். இது நூல் போன்று இருக்கும். இந்த இடைவெ ளிக்கு பிரத்யேகமான பிரஷ்களும் உள்ளன. இவற்றை பயன்படுத்தி அவ்விடங்களை சுத்தம் செய்யலாம். இதிலும் சரியாகவில்லை என்றால், இடைவெளிக்கு பக்கத்தில்உள்ள பற்களை அடைத்தோ, அதில் கேப் போட்டோ இந்த இடைவெளியை சரிசெய்யலாம்.* நான் 7 ஆண்டுகளாக கழற்றி மாட்டும் பல் செட் அணிந்துள்ளேன். பல்செட் போடும் இடத்தில் சிகப்பாக உள்ளது. எரிச்சலும் வலியும் உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும்?கழற்றி மாட்டும் பல் செட் அணிபவர்களுக்கு பொதுவாக வரும் 'டென்ச்சர் ஸ்டோமடைடிஸ்' எனப்படும் நோய் தொற்று இது. இதற்கு காரணம் பல்செட் சரியாக பராமரிக்க ப்படாமல் இருப்பது அல்லது பற்கள் மற்றும் ஈறுகள் ஆரோக்கியமாக இல்லாமல் இருப்பது. இச்சமயங்களில் ஈஸ்ட் எனப்படும் கிருமியால் இவ்வகை சிகப்பு அல்லது தடிப்புகள் வரும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், புகை பிடிப்பவர்களுக்கும் டென்ச்சர் ஸ்டோமடைடிஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதை தவிர்க்க, பல்செட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இரவில் கழற்றி நீரில் போட்டு வைத்திருக்க வேண்டும். சோப்பு தண்ணீரில் மிருதுவான, பிரஷ் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் உணவு உண்ட பின், வாயை நன்கு கழுவ வேண்டும். பல் டாக்டரின் ஆலோசனையின்படி புதிய பல்செட் செய்யலாம் அல்லது நிலையான பல் கட்டலாம். டாக்டர் ஜெ.கண்ணபெருமான், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்