உள்ளூர் செய்திகள்

சிறப்பு குழந்தைகளுக்கான செயல்முறை மருத்துவம்!

பிறந்த குழந்தை ஏன் அழவில்லை என்பதில் ஆரம்பித்து, வயதான ஒருவரால் நடக்க முடிய வில்லை. ஞாபக மறதி இருக்கிறது, ஆட்டிசம், டிஸ்லெக்சியா என்ற கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகள் என்று அனைவருக்கும் செயல்முறை மருத்துவம் அவசியம். இதில் மருந்து, ஊசி போன்ற எதுவும் கிடையாது. மன, உடல் வளர்ச்சியில் உள்ள குறைபாடுகளை சரி செய்து, தினசரி வாழ்க்கையை யாருடைய உதவியும் இன்றி இயல்பாக நடத்த உதவி செய்வதே, செய்முறை மருத்துவத்தின் நோக்கம். உதாரணமாக, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் கையெழுத்து நன்றாக இல்லை. அதனால், அவன் சரியாக மதிப்பெண் பெறவில்லை. அவன் எழுத்து நன்றாக இல்லாததற்கு என்ன காரணம் என்பதை கண் டறிய, ஒரு அறிவியல் பூர்வ உத்தியை நாங்கள் கையாள்வோம். பொதுவாக கையெழுத்தை சரி செய்ய இரண்டு, நான்கு கோடிட்ட நோட்டுகளை தருவர். அப்படியும் அவன் கையெழுத்து மேம்படவில்லை; நான்கு பக்கத் திற்கு மேல் எழுத முடிய வில்லை; கை வலிக்கிறது என்று சொல்கிறான். இதற்கான அறிவியல் பூர்வமான காரணங்களை ஆராய்ந்தால், அந்த மாணவன் உட்காரும் விதம், பென்சில் பிடிக்கும் விதம், அதில் தரும் அழுத்தம், உடல் உணர் வுகளை உணர முடியாத தன்மை இப்படி ஏதோ ஒன்று இருக்கும். அவற்றை கண்டறிந்து சரி செய்தால், அவன் கையெழுத்து சரியாகி விடும். அதே போன்று பக்கவாத பாதிப்பால் செயலிழந்த உறுப்புகளை செயல் பாட்டுக்கு கொண்டு வருவதிலும் செயல்முறை மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவ மனையில் வைத்து பயிற்சி தருவதோடு எங்கள் பணி முடிவதில்லை பாதிக்கப் பட்டவரின் வசதிக்கு ஏற்றவாறு, வீட்டில், அலுவலகத்தில், வாகனத்தில் மாற்றங்களை செய்து தரு வோம். வாழ்க்கை முறை மாற்றம், உறவுகள் இல்லா மல் வளர்வது போன்ற பல காரணங்களால், 10 குழந்தைகளில் ஒன்று ஆட்டிசம் அறிகுறிகளுடன் பிறக்கிறது. மூன்று வய திற்குள் இதை அடையாளம் கண்டு எங்களிடம் அழைத்து வந்தால், செயல்முறை மருத்துவத்தின் உதவியுடன், மற்றவர்களை சார்ந்து இல்லாமல் வாழ பயிற்சி தர முடியும். டாக்டர் பி.ராஜ்குமார், தலைவர், செயல்முறை மருத்துவத் துறை,ஸ்ரீராமச்சந்திரா இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் எஜுகேஷன் அண்டு ரிசர்ச்,சென்னை 044 - 2476 5542, 91768 99933raghurammot@sriramachandra.edu.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !