"ஸ்டென்ட் வைத்திருப்பதை சொல்ல வேண்டும்!
பன்னீர்செல்வம், கூடலூர்: எனக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன், மாரடைப்பு ஏற்பட்டு, 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டது. தற்போது, நலமாக உள்ளேன். ஆனால், வயிற்றில் தொந்தரவு உள்ளது. இதற்காக சிகிச்சை பெறும் டாக்டரிடம், இதய நோய் பற்றி கூற வேண்டுமா?வாழ்க்கை முறை மாற்றம், தினசரி நடைப்பயிற்சி, வேளை தவறாமல் மருந்து எடுத்துக் கொள்வது போன்றவை, இதய நோய்க்கு மிகவும் அவசியமான பழக்கம். எந்த நோய்க்கும், வேறு எந்த டாக்டரிடம் ஆலோசனை பெற்றாலும், அவசியம், உங்கள் இதய பாதிப்பு, அதற்கு, 'ஸ்டென்ட்' பொருத்தி இருப்பது பற்றி, கூற வேண்டும். அதற்கேற்பவே, அவரது சிகிச்சை முறை, மருந்து மாத்திரைகள் அமையும்.