ஹெல்த்கார்னர்: வயிற்று பிரச்னைகளுக்கு...
* வெளி உணவுகளால் ஏற்படும்,'புட் பாய்சன்' மற்றும் வயிற்று பிரச்னைகளில் இருந்து, சீரகம் விடுவிக்கும். அதிலும், உடனடி நிவாரணம் கிடைக்க, ஒரு டம்ளர் நீரில், ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, தினமும், இரு வேளை குடிக்க வேண்டும்.* தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது, அஜீரண பிரச்னைக்கு தீர்வளிக்கும். அதற்கு, தினமும் பலமுறை, ஒரு டீஸ்பூன் தேனை உட்கொண்டு வாருங்கள்; பிரச்னையை தவிருங்கள்.