உயர் ரத்த அழுத்த அபாயம் மகளிருக்கு அதிகம்!
ஆண்களை காட்டிலும் பெண்களின் ரத்த நாளங்கள் விரைவாக முதுமை தன்மையை அடைவதாக கூறுகிறது ஆய்வு. அதாவது, மிகக் குறைந்த வயதிலேயே பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வரும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரத்த அழுத்த மாதிரிகளை வைத்து, 43 ஆண்டுகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் 53 சதவீதம் பெண்களின் ரத்த அழுத்த அளவீடுகள்.பெண்களுக்கு 20 வயதில் இருந்தே, வெளியில் தெரியாமல், படிப்படியாக ரத்த அழுத்தம் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. இதயம் தொடர்பான பிரச்னைகள், பக்கவாதம், இதய செயலிழப்பு, மாரடைப்பு போன்ற பல்வேறு கோளாறுகளுக்கும் வலுவான அடிப்படை காரணம் உயர் ரத்த அழுத்தம்.இதற்கு மரபியல், உடல், மன செயல்பாடுகள் காரணமாக இருக்கலாம். உயர் ரத்த அழுத்தம் உள்ள 30 வயது ஆண்களை விட, பெண்களுக்கு இதய கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.ஜே.ஏ.எம்.ஏ.,கார்டியாலஜி