உள்ளூர் செய்திகள்

பல்லை தேய்ப்பது எப்படி

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் எனது மகன், பள்ளி விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று கீழே விழுந்ததில் பல்லில் அடிபட்டது. விளையாடும்போது பற்களை பாதுகாப்பது எப்படி?குழந்தைகள், பெரியவர்கள் அனைவருமே விளையாடும்போது பற்களின் மீது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, குத்துச்சண்டை, ஸ்கேட்டிங் விளையாட்டுக்களின் போது, வாய், தாடை எலும்பில் அடிபட வாய்ப்புகள் அதிகம். இதை தவிர்க்க, 'மவுத் கார்டு' என்ற வாய் பாதுகாப்பு கவசம் அணிய வேண்டும். எதிர்பாராமல் படும்அடியில் இருந்து, நாக்கு, உதடு, பற்கள் பாதுகாக்கப்படும். இதனை அணிவதால் எந்த அசவுகரியமும் இருக்காது. பற்களில் கம்பி போட்டுள்ளவர்களும் அதற்கேற்றவாறு இவற்றை அணியலாம். அதை சுத்தம் செய்ய, பல் தேய்க்கும் பிரஷ்ஷால் சுத்தம் செய்துவிட்டு, தண்ணீரில் போட்டு வைத்தால் போதும்.நான் சரியான பிரஷ்ஷால் தேய்க்காததால் எனக்கு சொத்தை பற்கள், பல்கூச்சம் ஏற்பட்டுள்ளது என, டாக்டர் கூறுகிறார். சரியான பிரஷ்ஷை தேர்வு செய்வது எப்படி<? சரியான முறையில் பல்தேய்ப்பது எப்படி?சரியான பிரஷ்ஷை தேர்வு செய்வதும், சரியான முறையில் பல்தேய்ப்பதும்தான், பற்களின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது. முதலில் உங்கள் வாயின் அளவிற்கேற்ப பிரஷ்ஷை தேர்வு செய்ய வேண்டும். பிரஷ் அளவு பெரிதாக இருந்தால் சரியாக எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்ல முடியாது. அடுத்து பிரஷ் மிகவும் மிருதுவாகவும் இருக்கக் கூடாது; கடினமானதாகவும் இருக்கக் கூடாது. மிக மிருதுவாக இருந்தால் சரியாக சுத்தம் செய்யாது. கடினமாக இருந்தால், பற்கள் சீக்கிரம் தேயத் துவங்கும். ஒரு நாளைக்கு 2 முறை பல்துலக்கினால் போதுமானது. அடிக்கடி பல்துலக்குதல் பற்களுக்கு நல்லதல்ல. பல் துலக்கும்போது பற்களின் வெளிப்புறம், உள்புறம், ஈறுகள், நாக்கு போன்ற எல்லா இடங்களையும் நிதானமாக சுத்தம் செய்ய வேண்டும். 2, 3 நிமிடங்கள் வரை நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். நீளவாக்கில் துலக்காமல், மேலும், கீழுமாக அல்லது வட்ட வடிவமாக பல் துலக்க வேண்டும். துலக்கிய பின், பிரஷ்ஷை உலர்வான இடத்தில் வைக்க வேண்டும். ஈரமான இடத்தில் வைத்தால், பிரஷ்ஷில் நிறைய கிருமிகள் தங்கும். 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். இப்படி சரியான பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான பல்லை பெறலாம்.- டாக்டர் கண்ண பெருமான்,மதுரை. 94441-54551.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்