ரத்தம் சிந்தாமல் விளையாடுவது எப்படி?
ரத்தம் உறைவதற்கு தேவையான காரணிகள் குறைவாக இருந்தால், காயம் ஏற்பட்டால் நீண்ட நேரம் ரத்தம் வெளியேறும் நிலை ஏற்படும். மரபணு காரணியால் ஏற்படும் இப்பிரச்னைக்கு, 'ஹீமோபீலியா' என்று பெயர். பாதிப்பு ஆண்களை இது அதிகம் பாதிக்கிறது. ஹீமோ பீலி யாவில் பல வகைகள் உள்ளன. இவற்றில், 'ஹீமோபீலியா ஏ, ஹீமோபீலியா பி' ஆகிய இரண்டும் பொதுவானவை. ஹீமோபீலியா பியை, 'கிறிஸ்துமஸ் நோய்' என்றும் சொல்வர். இந்தியாவில், 80 - 85 சதவீதத்திற்கு மேற்பட்டோ ரி டையே ஹீமோபீலியா பாதிப்பு கண்டறியப்படாமல் உள்ளது. ஹீமோபீலியா பியை விட, ஹீமோபீலியா ஏ, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இந்நோய், 'எக்ஸ் குரோமோசோம்' மூலம், தாயிடம் இருந்து ஆண் குழந்தையை பாதிக்கிறது. அதிக ரத்தப்போக்கு சிறிய காயங்களிலும் நீண்ட நேரம் ரத்தம் வடிவது, உள்ளுறுப்பு களில் ரத்தம் வடிவது, மூட்டுகள், தசைகள், மூளையில் இருந்து தன்னிச் சையான ரத்தம் கசிவது, மூட்டு களில் ரத்தப் போக்கு ஏற்படுவது, இதனால் வலி, வீக்கம் ஏற் படும். ரத்தப் பரிசோதனை வாயிலாக ரத்தம் உறையும் நேரம் மற்றும் மரபணு காரணியின் தாக்கத்தை தெரிந்து கொள்ளலாம். சிகிச்சை முறை காரணி மாற்று சிகிச்சை செய்வதன் வாயிலாக, ரத்தம் உறைதலுக்கு தேவையான காரணியை உடலுக்குள் செலுத்தலாம். ரத்தப்போக்கை தடுக்கும் இக்காரணியை, குறிப்பிட்ட இடைவெளியில் உடலுக்குள் செலுத்த வேண்டும். காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, 'ஆஸ்பிரின்' போன்ற வலி நிவாரணி மருந்துகளை தவிர்த்தல் போன்றவையும், ரத்தம் வேகமாக வெளியேறுவதைத் தடுக்க உதவும். ஹீமோபீலியா ஏ கோளாறுக்கு, வாரந்தோறும், இரு வாரங்களுக்கு ஒரு முறை, மாதந்தோறும் என்று நோயாளியின் தேவைக்கு ஏற்ப ஊசி மருந்து செலுத்த வேண்டும். 'கோன்சிசுமாப்' என்ற ஊசி மருந்து, ஹீமோபீலியா ஏ, பி பாதிப்புள்ள 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நோயாளிகளுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டுக்கு வந்தது. ரத்தக்கசிவின் வேகத்தை குறைக்கும் தடுப்பான்கள் உள்ளவர்களுக்கு பயன்படும் மருந்து இது. 'மார்ஸ்டாமாப்' தடுப்பான்கள் இல்லாத ஹீமோபீலியா ஏ, பி பாதிப்பு உள்ளவர்களுக்கு உபயோகிக்கப்படும் ஊசி மருந்து. இத்துடன் மரபணு சிகிச்சைகளும் உள்ளன. உடனடி பரா மரிப்பு, அல்ட்ரா சவுண்ட் பரி சோதனைகள், மூட்டு களில் ஏற்படும் ரத்தக் கசிவு கண்டறிய பயன்படுகின்றன. ஹீமோபீலியாவால் பாதிக்கும் குழந்தைகளை விளையாட விடலாமா? தேசிய ஹீமோபீலியா அறக்கட்டளை மற்றும் உலக ஹீமோபீலியா கூட்டமைப்பு போன் றவை பரிந்துரைக்கும் நீச்சல், சைக்கிள் ஓட்டுவது, நடைப்பயிற்சி, மலையேறுதல், கோல்ப், டேபிள் டென்னிஸ், பேட்மிட்டன், வில் வித்தை போன்ற பாதுகாப்பான விளையாட்டுகளை, குழந்தைகள் விளையாடலாம். இவை, ரத்தப்போக்கு அபாயங்களை குறைப்பதோடு, மூட்டு நிலைத்தன்மை, தசை வலிமை மற்றும் சமூக ஈடுபாட்டையும் மேம்படுத்துகின்றன. கால்பந்து, மல்யுத்தம், குத்துச்சண்டை, ஹாக்கி மற்றும் அதிவேக மோட்டார் விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள்: சைக்கிள் ஓட்டும் போதும், ஸ்கேட்டிங் செய்யும் போதும், தலைக்கவசம், பாதுகாப்பு பட்டைகளை அணிவது அவசியம். மூட்டுகளை பாது காத்து வலுவான தசைகள் உருவாக்க, தவறாமல் உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிக்க வேண்டும். ஹீமோபீலியா நோயை தடுக்க முடியுமா? ஹீமோபீலியா என்பது மரபணு மாற்றத்தால் உண்டாகும் நோய் என்பதால், தடுக்க இயலாது. கர்ப்பம் தரிப்பதற்கு முன், இந்த மரபணு மாற்றம் உள்ளதா என்று கண்டறியலாம். செயற்கை கருத்தரிப்பில் குழந்தை பெறுபவர்கள், மரபணு பிரச்னையான உள்ளதா என்பதை கண்டறிந்து, ஆரோக்கியமான கருவை தேர்வு செய்யலாம். உயரம் மற்றும் வயதிற்கு தகுந்த உடல் எடையை பராமரிப்பது அவசியம். அதிக உடல் எடை, மூட்டுகளில் ரத்தக் கசிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். புரதம், இரும்பு சத்து நிறைந்த உணவுகள், விட்டமின் சி, முழு தானியங்கள், போதிய அளவு நீர்ச்சத்து என்று சமச்சீரான உணவு சாப்பிட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் ஹீமோபீலியாவுக்கான தடுப்பு மருந்துகள் இலவசமாக கிடைக்கின்றன. டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை, இணை பேராசிரியர், குழந்தைகள் நலத்துறை, அரசு திருவள்ளூர் மருத்துவக் கல்லுாரி 94444 75309sppillai26@yahoo.co.in