வியர்க்குருவை போக்கும் நுங்கு நீர்!
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டது. இது இயற்கையே. நம் முன்னோர்கள் இதை எப்படி எதிர்கொண்டனர் என்பதை அறிந்து, அதை நாமும் பின்பற்றினால், வெயிலால் வரக்கூடிய நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, நன்னாரி சர்பத் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். இவை தவிர, மேலும் சில மூலிகைகள் மற்றும் உணவுகள் உள்ளன. அவற்றில் சில:தாழம்பூ மணப்பாகு: தாழம்பூவை நன்னாரி சர்பத் போலவே மணப்பாகு செய்து அருந்தி வர, உடல் வெப்பத்தை தணிக்கும்.கம்பங்கூழ்: உடல் கொதிப்பை அகற்றி குளிர்ச்சியை தரும்; பலத்தை தரும். வயிற்றுப் புண் உள்ள நோயாளிகள் பசுந்தயிர் அல்லது மோர் கலந்த கம்பங்கூழை அருந்தி வர, வயிற்றுப் புண்ணை ஆற்றி குளிர்ச்சியை தரும்.தாமரைப் பூ தண்ணீர்: சிலருக்கு வெயிலால் பித்தம் அதிகரித்து காய்ச்சல் வரும். இவர்கள் தாமரைப் பூவில் கஷாயம் செய்து குடித்து வரலாம். நுங்கு உள்ளிருக்கும் நீரைத் தடவினால், வியர்க்குரு மறைந்து விடும்.டாக்டர் ஜே.ஜெயபாரதி, சித்த மருத்துவர், தஞ்சாவூர்.81244 77978