உள்ளூர் செய்திகள்

ஆரோக்கியமாக வாழ வேண்டுமா முதலில் பண்ண வேண்டியது டீ டாக்ஸ்

மனித உடலில் கழிவுகளின் தேக்கமே, நோய்களுக்கான வழித்தடமாக மாறிவிடுகிறது. சரியான முறையில் உடலை 'டீடாக்ஸ்' அதாவது, கழிவு நீக்கம் செய்தாலே, பெரும்பாலான நோய்கள் நம்மை நெருங்காமல் பாதுகாக்க முடியும் என்கிறார், கோவை தன்வந்திரி ஆரிய வைத்திய பார்மசி ஆயுர்வேத மருத்துவர் விஜயபிரியா. அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது... எண்ணெய் தேய்த்து குளியல் ஆரோக்கியத்தில் முதன்மையாக நாம் கவனம் செலுத்த வேண்டியது டீடாக்ஸ். முன்பெல்லாம், எண்ணெய் தேய்த்து குளித்ததும், விளக்கெண்ணெய் குடிக்க கொடுத்ததும் இதற்குதான். பொதுவாக இரவு நேரத்தில் தான், நம் உடல் அனைத்து உறுப்புகளும் இயல்பாகவே டீடாக்ஸ் வேலைகளை துவங்கும்.முக்கியமான மூன்று உடல் டீடாக்ஸ் ஆவதற்கு சரியான உணவு முறை, உடற்பயிற்சி, துாக்கம் கட்டாயம். தற்போது, மொபைல் போன் வைத்துக்கொண்டு நள்ளிரவு, 12, 1 மணி வரை விழித்துக்கொண்டு இருக்கின்றனர். கண்களில் சூழும் இருளே, கழிவுநீக்க ஹார்மோன்களை வெளியிடுவதற்கான அறிகுறியாக மூளை எடுத்துக்கொள்ளும். தாமதமாக துாங்குவதால் சரியாக ஜீரணம் ஆகாமல், உணவுகளே நம் உடலில் விஷக்கழிவுகளாக தேங்கிவிடுகிறது. இத்தேக்கம் நாளடைவில் நோய்களாக மாறுகின்றன.எழுந்தவுடன் டாய்லெட்குழந்தைகளை சரியான நேரத்திற்கு காலையில் எழுப்பவேண்டியதும், சரியான நேரத்தில் விளக்குகளை அனைத்து உறங்க வைப்பதும், காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக டாய்லெட் செல்ல பழக்க வேண்டியதும் அவசியம். வாரம் அல்லது இரண்டு வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்கவைப்பதும் முக்கடியம். வெயில் காலம் துவங்கும் முன் ஜன., மாதத்திலும், குளிர் காலம் துவங்கும் முன் ஆடி மாதத்திலும், விளக்கெண்ணெய் கொடுத்து வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும்.மைதாவால் மலச்சிக்கல்உணவு முறை சரியாக இருக்க வேண்டும். காய்கறி, பழங்கள், தானியங்கள் உள்ளிட்ட அனைத்தும் சரியான விகிதத்தில் கட்டாயம் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் அனைத்து காய்கறியும் உண்ண பழக்க வேண்டும். மைதா, துரித உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொண்டால், கழிவு வெளியேறுவதில் சிரமங்கள் இருக்கும்.காலையில் குடிக்கலாம்'டீடாக்ஸ் வாட்டர்' என்பது, தனிப்பட்ட நபர்களின் உடல் தன்மை பொறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, வெள்ளை பூசணி, சுரக்காய் ஜூஸ், கொத்துமல்லி அல்லது சுக்கு காபி, போன்றவற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். உடலில், வெப்பம், குளுமை என்ற இரண்டு தன்மைகள் உள்ளன. யாருக்கு என்ன குறைபாடு உள்ளது, என்ன தேவை என்பதை மருத்துவர்களை அணுகி தெரிந்து, பின்னர் பயன்படுத்தலாம்.எடை குறையணுமா? உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், கழிவுகளை எளிதாக வெளியேற்ற நினைப்பவர்கள், 'இன்டர்மிட்டன்ட் பாஸ்டிங்' அதாவது, விரத முறை டயட் பின்பற்றலாம். 8:00 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும்சிக்கல் இருக்கிறதா? காலையில் கழிவுகள், இயல்பாக வெளியேற வேண்டும். டீ, சுடுதண்ணீர் குடித்தால்தான் போக முடியும், வாக்கிங் போனால் தான் முடியும் என்றால், கழிவுகளை நீக்கும் உறுப்புகளில் சிக்கல் உள்ளது என்று பொருள்.'15 சதவீத இளவயது மரணங்களுக்கு கழிவே காரணம்' * உலக சுகாதார நிறுவனம் புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் 15 சதவீத இள வயது மரணங்களுக்கு, முக்கிய காரணம் உடலில் சேர்ந்துள்ள டாக்சின் எனப்படும் கழிவுகள்தான். அதே போன்று மொத்த இறப்புகளில், 8.3 சதவீத இறப்புகளுக்கு விஷக்கழிவுகளே காரணமாக உள்ளது. *காய்கறி, பழங்களை உண்ணும் போது, நன்றாக கழுவ வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு உண்ண வேண்டும். வெளியிடங்களில் சாப்பிடுவதை குறைத்து, வீடுகளில் ஆரோக்கியமாக சமைத்து சாப்பிடுவது சிறந்தது. *பிரியாணி, பிரெட், கேக் போன்ற வெளி உணவுகளை எப்போதாவது ஒரு நாள் சாப்பிடுவது தவறில்லை. அப்படி வெளியில் ஒரு நாள் சாப்பிட நேர்ந்தால், அடுத்த இரண்டு நாட்கள் பழங்கள், காய்கறி மட்டும் சாப்பிட்டு, உடலில் சேர்ந்துள்ள கழிவை நீக்க அவகாசம் அளிக்க வேண்டும். கழிவுகள் உடலுக்குள் செல்வது இப்படித்தான்! காய்கறி விளைவிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், உணவில் உள்ள செயற்கை நிறமிகள், சுற்றுப்புற சூழலில் இருந்து காற்று, துாசு வழியாக செல்லும், எண்ணங்கள் வாயிலாகவும், நாம் உண்ணும் உணவு, மருந்துகள், பிளாஸ்டிக் பயன்பாடு என, பல்வேறு கழிவுகள் நம் உடலுக்குள் விஷக்கழிவுகளாக தேங்குகிறது. இதை அவ்வப்போது சரியான முறையில் வெளியேற்றி வந்தாலே, பல நோய்களின் பிடியில் சிக்காமல் தப்பிக்கலாம். - டாக்டர் விஜய்பிரியா ஆயுர்வேத மருத்துவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்