கட்டுப்பாடில்லாத சர்க்கரையால் அவதி!
எனக்கு 9 மாதங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில், லேசான அடைப்பு உள்ளதாக வந்துள்ளது. தற்போது Metaprolol, Aspirin, Statin வகை மாத்திரைகளை எடுத்து வருகிறேன். மாரடைப்புக்கு பின் எனக்கு 'வீசிங்' (Wheezing) என்னும் 'இளைப்பு நோய்' அதிகரித்து உள்ளது. நான் என்ன செய்வது?என். சிதம்பர ராஜன், திண்டுக்கல்உங்களுக்கு மாரடைப்புக்குப் பின் கொடுக்கப்பட்டுள்ள மாத்திரைகள் மிக நல்ல மாத்திரைகள்தான். ஆனால், சிலருக்கு 'மெட்டப்புரோலால்' மாத்திரைகளை எடுக்கும்போது 'வீசிங்' அதிகரிக்கும் தன்மை உள்ளது. ஏனெனில் அது, Beta Blocker வகையை சேர்ந்த மாத்திரையாகும். எனவே இம்மாத்திரையை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக உங்கள் டாக்டரின் ஆலோசனை பெற்று, வேறு மாத்திரை எடுத்தால் உங்களுக்கு வீசிங் குறைய வாய்ப்பு உள்ளது. இதுதவிர வீசிங்கிற்கு என, இன்ஹேலர்கள் உட்பட மருந்துகள் உள்ளன. அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.