உள்ளூர் செய்திகள்

குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் அடிக்கடி வருவது இயல்பா?

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் காரணிகள் எவை, சத்தான உணவு எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல கேள்விகளுடன், அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் மோகன்ராஜை அணுகினோம்.எந்த வயதில் குழந்தையின் வளர்ச்சியில் தாமதம் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்?குழந்தைகள் வளர்ச்சி ஒவ்வொருவருக்கும் சிறிய வித்தியாசத்துடன் இருக்கும். 18 மாதங்கள் கடந்தும் நடக்கவில்லை என்றாலோ, அர்த்தமுள்ள ஒரு சிறு வார்த்தை கூட பேசவில்லை என்றாலோ அல்லது பெற்றோரின் குரல், கண் தொடர்பு, அழைப்புக்கு பதில் அளிப்பதில் குறைபாடு இருந்தாலோ, இரண்டு வயதிலும் இரண்டு வார்த்தைகள் இணைத்து பேச முடியவில்லை என்றாலோ, அவை தாமத வளர்ச்சி. குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும்.துாக்கமின்மை குழந்தைகளின் வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது?குழந்தைகளின் உடல், மூளை வளர்ச்சிக்கு, துாக்கம் அவசியம். வயதுக்கு ஏற்ற தூக்கம், தினசரி குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும்.கிடைக்காத குழந்தைகளுக்கு கவனச்சிதறல், படிப்பில் சிரமம், எரிச்சல், அதிக கோபம் ஏற்படலாம். தூங்குவதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன், போன், டிவி போன்ற திரை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். தூங்கும் அறையில் சத்தமில்லாமல், வெளிச்சம் அதிகம் இல்லாமல் இருப்பது நல்லது.தற்போது குழந்தையிடம் அதிகமாக காணப்படும் உடல்நல பிரச்னைகள் என்ன? அடிக்கடி காய்ச்சல் வருவது இயல்பா?தற்போது குழந்தைகளுக்கு, வைரஸ் தொற்றுகள் மூலம் ஏற்படும் சளி, காய்ச்சல், இருமல் போன்றவை தான் அதிகம் காணப்படுகிறது. சுவாசப் பாதை நோய்கள், அலர்ஜி, ஆஸ்துமா, ஊட்டச்சத்து குறைபாடுகள், உடல் எடை அதிகமாக, குறைவாக இருப்பது போன்ற பிரச்னைகளுக்கும் சிகிச்சைக்கு வருகின்றனர். பெரும்பாலான பாதிப்புகள் வைரஸ் தொற்றுகளால் ஏற்படுபவை.காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தாலோ, மூச்சுத்திணறல், தொடர் வாந்தி, அதிக சோர்வு, தண்ணீர் குடிக்க முடியாத நிலை, மந்தமாக இருத்தல், வலிப்பு போன்ற பிரச்னைகள் இருந்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு வளர்ச்சியில் தாமதம் நிகழுமா?ஆரம்ப கால வளர்ச்சியில் சில தாமதங்கள் காணப்படலாம். ஆனால் வளர்ச்சியை மதிப்பிடும் போது அவர்கள் பிறந்த தேதியை கணக்கில் கொள்ளாமல், கரெக்டட் ஜெஸ்டேஷனல் ஏஜ் (Corrected Gestational Age) அடிப்படையில் குழந்தைகளின் வளர்ச்சியை மதிப்பீடு செய்வது முக்கியம்.பல குறை மாத குழந்தைகள் சரியான மருத்துவ கண்காணிப்பு, போதுமான ஊட்டச்சத்து, ஆரம்ப கால சிகிச்சைகள் (Early Intervention) மற்றும் தெரபி மூலம் நல்ல வளர்ச்சியை அடைகிறார்கள்.நீங்கள் முதல் முறை பெற்றோரா?ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். மற்ற குழந்தைகளின் வளர்ச்சி, குணாதிசயங்களுடன் ஒப்பிடாமல், உங்கள் குழந்தையின் வளர்ச்சியை மட்டும் கண்காணிக்க வேண்டும். வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே போதும். ஆறு மாதத்திற்கு மேல் இணை உணவு சேர்க்க வேண்டும். தடுப்பூசிகளை சரியான நேரத்தில் போட வேண்டும். சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் அனைத்து தகவல்களையும் நம்பாமல், குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.- டாக்டர் மோகன்ராஜ்mohanraj1704@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !