உள்ளூர் செய்திகள்

"சிறிய வேலை செய்தாலே மூச்சு வாங்குகிறதே

* எனது வயது 68. ஓராண்டுக்கு முன் மாரடைப்பு வந்தது. இரண்டு ஸ்டென்டுகள் பொருத்தப்பட்டன. ஸ்டென்ட் வைப்பதைவிட, பைபாஸ் சர்ஜரி சிறந்தது என கூறுகிறார்களே. இது சரிதிலகர்ஞானம், திருப்புத்தூர்.யா? இருதயத்திற்கு ரத்த ஓட்டம் 3 ரத்தநாளங்கள் வழியாகச் செல்கிறது. இடது புறம் 2, வலதுபுறம்1 என, ரத்தநாளங்கள் உள்ளன. இந்த ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் இருதயத்திற்கு ரத்தஓட்டம் பாதிக்கும். இந்த ரத்தநாளங்களில் உள்ள அடைப்பை நீக்க 3 வகை சிகிச்சை முறைகள் உள்ளன. மருந்து மாத்திரைகள், பலூன் மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை, பைபாஸ் சர்ஜரி சிகிச்சை ஆகியவையே அவை. மருந்து மாத்திரை சிகிச்சையில், ரத்த நாள அடைப்பை நன்கு கட்டுப்பாட்டில் வைக்கவும், அடைப்பு அதிகரிக்காமல் இருக்கவும், அடைப்பால் மாரடைப்பு வராமல் பார்த்துக் கொள்ளவும் முடியும். பலூன் மற்றும் ஸ்டென்ட் சிகிச்சையில், அறுவை சிகிச்சையின்றி, கையில் இருந்தோ, காலில் இருந்தோ, சிறிய கதீட்டரை இருதயத்துக்குள் செலுத்தி, அதன் மூலம் பலூனை வைத்து அடைப்பை நீக்கி, பால்பாயின்ட் ஸ்பிரிங் போன்ற ஸ்டென்ட் என்னும் பொருள் உள்ளே பொருத்தப்படுகிறது. தற்போது இந்த ஸ்டென்ட் சிகிச்சை அற்புதமாக வளர்ந்துள்ளது.மருந்து தடவியவை, மருந்து தடவாதவை, கரைந்து, மறைந்து போகும் அளவிலான ஸ்டென்டுகள் உள்ளன. இச்சிகிச்சை தற்போது பைபாஸ் சர்ஜரி அளவுக்கு நல்ல பலனை தருவதாக உள்ளது. பைபாஸ் சர்ஜரி என்பது நெஞ்சில் இருந்தோ, கால், கையில் இருந்தோ, ரத்தநாளங்களை எடுத்து, இருதயத்தில் பொருத்தும் அறுவை சிகிச்சை. ஒருவருக்கு எந்த சிகிச்சை சிறந்தது என்பது, எத்தனை அடைப்பு என்பதை பொறுத்ததல்ல. எந்த இடத்தில் அடைப்பு என்பதை பொறுத்ததாகும். அதை உங்கள் இருதய நிபுணர் அறிவார். ஸ்டென்ட் சிகிச்சையைவிட, பைபாஸ் சர்ஜரி சிறந்தது என்பது மிகத்தவறான கருத்து. நோயாளிக்கு எந்த சிகிச்சை முறை என்பதை இருதய டாக்டரே தீர்மானித்து அதன்படி சிகிச்சை அளிப்பார்.* எனது வயது 48. சிலமாதங்களாக, சிறிய வேலை செய்தாலே அதிகமாக மூச்சு வாங்குகிறது. இது எதனால்? சி.ராஜன்பாபு, மதுரை.சிறிய வேலை செய்தாலே அதிக மூச்சு வாங்குவதற்கு பல காரணங்கள் உள்ளன. ரத்தசோகை மற்றும் வேறுசில ரத்தம் தொடர்பான கோளாறுகளால் இப்படி ஏற்படலாம். இருதயத்தை பொறுத்தவரை இருதய ரத்தஓட்டம் பாதிப்பு, வால்வுகளில் கோளாறு, இருதய பம்பிங் திறன் குறைதல் போன்ற காரணங்கள் உள்ளன. இதுதவிர நுரையீரல் கோளாறுகளாலும் வரலாம். எனவே உங்கள் டாக்டரை சந்தித்து, ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்ரே, இ.சி.ஜி., எக்கோ, டிரெட்மில் பரிசோதனைகளை செய்தாக வேண்டும். இவற்றின் முடிவுக்கு ஏற்ப சிகிச்சை அமையும்.*எனக்கு ஆறுமாதங்களுக்கு முன் ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து, இருதயத்தில் 2 ஸ்டென்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு 7 வகை மருந்து எடுத்து வருகிறேன். தற்போது நான் மலச்சிக்கலால் அவதிப்படுகிறேன். நான் என்ன செய்வது? சி.தங்கம், ஸ்ரீவில்லிப்புத்தூர்.உடற்பயிற்சி, அதிக தண்ணீர் குடிப்பது, காய்கறி, பழங்களை அதிகம் உண்பது, நார்ச்சத்து மற்றும் சைவ உணவை உண்பது மூலம் மலச்சிக்கலை தவிர்க்க முடியும். இருதய நோயாளிகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட, மருந்து முக்கிய காரணமாக உள்ளது. உங்கள் இருதய டாக்டரை நீங்கள் சந்தித்து, மருந்துகளை மாற்றி அமைத்தால் தீர்வு காணலாம். இதுதவிர மலச்சிக்கலை தீர்க்கவும், நல்ல மருந்துகளும் உள்ளன. டாக்டர் சி.விவேக்போஸ்,மதுரை. 0452- 233 7344


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்