என் இனிய சர்க்கரையே!
துாக்கமின்மை, இரவு, பகல் மாறி மாறி வேலை செய்வது, தவறான உணவு பழக்கவழக்கம் உள்ளிட்ட காரணங்களால், 45 வயதுக்கு மேல் வர வேண்டிய நீரிழிவு பாதிப்பு தற்போது, 20-25 வயதினருக்கு ஏற்படுவதாக, அரசு மருத்துவமனை நீரிழிவு பிரிவு டாக்டர் அருண் தெரிவித்தார்.டைப் 2 பாதிப்பு அதிகரிக்க காரணம் என்ன?வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களே காரணம். துாக்கமின்மை, மன அழுத்தம், இரவு, பகல் மாறி மாறி வேலை செய்வது, உடற்பருமன், தவறான உணவு பழக்கம், கணையம் இன்சுலின் சுரந்தாலும், உடல் செல்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஆகியவற்றால், டைப் 2 பாதிப்பு ஏற்படுகிறது.இந்தியாவில் 13 கோடி பேர், முன் நீரிழிவு நிலையில் உள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இவர்கள் வாழ்வியல் முறையை மாற்றாவிட்டால், எப்போது வேண்டுமானால், நீரிழிவு பாதிப்புக்கு உள்ளாவர்.பாதிப்புகள் என்னென்ன?நீரிழிவு இருந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, ரத்த குழாய் அளவில் மாற்றம், உடல் பருமன் உள்ளிட்டவை வரும். உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். மாரடைப்பு வந்தாலும், அறிகுறிகளை வெளிப்படுத்தாமலே இறப்பு நேரிடும். ரத்த ஓட்டம் கால்களுக்கு செல்வது குறைவதால் தான், பலருக்கும் காலில் எரிச்சல், ஊசி குத்துவது போல வலித்தல், உணர்ச்சியில்லாத நிலை ஏற்படுகிறது. இந்தியாவில் எட்டு நிமிடத்திற்கு ஒருவருக்கு கால் இழப்பு, கால் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.உணவிலும் உடற்பயிற்சியிலும் தேவை கவனம்1. உணவு: அதிக புராசசிங் செய்யப்பட்ட உணவு, சர்க்கரை பானங்கள், சுத்திகரிக்கப்படாத கார்போ ஹைட்ரேட் உணவு தவிர்ப்பது அவசியம். நார்ச்சத்து மிகுந்த, புரோட்டீன் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும். 2. உடற்பயிற்சி: தினசரி 30 நிமிடங்களாவது உடற்பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும். எளிய நடைப்பயிற்சி, யோகா, தியானம் செய்வது அவசியம். 3. மகிழ்ச்சி: மன அழுத்தம் தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தின் போது சுரக்கும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள், உடலில் சர்க்கரை அளவை நேரடியாக அதிகரிக்கின்றன. 4. தவறான பழக்கம்: மதுப்பழக்கம், புகைப்பிடித்தல், போதை மருந்து பழக்கத்தில் இருந்து விடுபடுதல் அவசியம்.5. மருந்துகள்: டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியாக உட்கொள்வது, மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பது போன்றவற்றில் கவனம் வேண்டும்.- டாக்டர் ஜி.அருண்மூத்த உதவி பேராசிரியர்அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை drarun.mmc@gmail.com