உள்ளூர் செய்திகள்

டாக்டரை கேளுங்கள்...

மகாதேவி, மதுரை: எனக்கு 50 வயது; நீர் கடுப்பு நோயால் அவதிப்படுகிறேன். இது எதனால் ஏற்படுகிறது, எப்படி தடுப்பது?சிறுநீர் பாதையில் ஏற்படும் கிருமித் தொற்றால் உருவாவதே நீர்கடுப்பு. உடலில் ரத்தத்தை வடிகட்டி தீங்கு விளைவிக்கும் தேவையற்ற விஷயங்களை வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் ஓய்வின்றி செய்கின்றன. தண்ணீரை சரியான அளவில் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிறுநீரின் நீர்ப்புத்தன்மை குறைந்து கிருமித்தொற்று ஏற்படும்.சிறுநீர் கழிக்கும் போது லேசான வலி, எரிச்சல் தோன்றுவது, சிறுநீர் கழித்து முடிக்கும் தருவாயில் அடிவயிற்றில் கனமாக கவ்வுவது போன்ற வலி ஏற்படுவதை நீர்கடுப்பு என்கிறோம். இளநீர், பழச்சாறு, எலுமிச்சை சாறு அருந்தும் போது நீர்ச்சத்து அதிகரித்து சரியாகலாம். பயணம் மேற்கொள்ளும் போது பலர் சிறுநீர் கழிக்கும் எண்ணம் வந்தாலும் வெளியேற்றுவதில்லை. குறிப்பாக பெண்கள் கழிப்பறை வசதி இல்லை என்றால் தண்ணீரும் குடிக்கமாட்டார்கள், சிறுநீரையும் அடக்கி வைப்பார்கள். இதனாலேயே சிறுநீர்த் தொற்றுக்கு ஆளாகின்றனர்.-- டாக்டர் அ.ப. பரூக் அப்துல்லா, பொது மருத்துவ நிபுணர், மதுரைஆர்.செந்தில்குமார், கூடலுார்: இனிப்பு சாப்பிடும்போது பல் கூச்சம் ஏற்படுகிறது காரணம், தீர்வு என்ன?குளிர்ந்த நீர் குடித்தாலும், இனிப்பு சாப்பிடும் போதும் பல் கூச்சம் ஏற்படுவது சிறிய பிரச்னையாக தோன்றினாலும் பற்சிதைவிற்கான ஆரம்ப அறிகுறிகள் ஆகும். சரியாக பராமரிக்காத பட்சத்தில் பல் நோய்களுக்கு வழி வகுக்கும். இனிப்புகளில் உள்ள சர்க்கரை நமது உமிழ்நீரில் உள்ள பாக்டீரியாக்கள் மூலம் அமிலமாக மாறி பல் மேற்பரப்பை கரைக்கிறது.தினமும் இரு முறை மென்மையான டூத் பிரஷ் மூலம் பல் துலக்க வேண்டும். இனிப்பு சாப்பிட்ட பின் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். எலுமிச்சை, சோடா போன்ற அமிலப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.-- டாக்டர் கணநாதன், பல் மருத்துவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூடலுார்ச.கதிரேசன், ராமநாதபுரம்: எனக்கு 40 வயதாகிறது, ஓராண்டாக துாக்கமின்மை பிரச்னையால் சிரமப்படு கிறேன். இதனால் பணியில் கவனம் செலுத்த முடிவதில்லை. இயற்கை மருத்துவத்தில் இதற்கு தீர்வு உண்டா?மன அழுத்தம், அலைபேசி பயன்படுத்துவது, மது பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் துாக்கமின்மை பெரும்பாலும் ஏற்படும். இதற்கு யோகா, இயற்கை மருத்துவத்தில் ஹைட்ரோதெரபி, மசாஜ் தெரபி, அரோமா தெரபி, யோகாசனம் மூலம் தீர்வு காண முடியும். ஹைட்ரோதெரபியில் வெந்நீர் கால் குளியல், இடுப்பு குளியல், முதுகெலும்பு குளியல் தினமும் செய்ய வேண்டும். தலை, பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் துாக்க ஹார்மோன் சுரப்பை ஊக்குவிக்கும். துாங்க செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு தியானம் செய்வது சிறந்தது. வாரத்தில் 3 முறையாவது மண் குளியல் செய்வதன் மூலம் உடல் வெப்பம் குறைந்து அமைதியான துாக்கத்தை தரும். காபி, டீ, சாக்லேட், எண்ணெய் உணவுகள், மதுபானங்கள் துாக்கமின்மைக்கு முக்கிய காரணங்கள். மதுபானம் ஆரம்பத்தில் துாக்கத்தை தந்தாலும், நாளடைவில் அமைதியான துாக்கத்தை பாதிக்கும். இரவில் அதிக உணவு உட்கொள்ளக்கூடாது. உணவு முறைகளை கட்டுக்குள் வைப்பதன் மூலமும் துாக்கத்தை மேம்படுத்த முடியும்.- டாக்டர் வி.ஆறுமுகராஜ், உதவி மருத்துவ அலுவலர், யோகா, இயற்கை மருத்துவப் பிரிவு, அரசு மருத்தவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்அ.ராஜா, சிவகங்கை: ஈறு நோயின் அறிகுறிகள் என்ன?ஈறு நோய் குணப்படுத்தக்கூடிய ஒன்று தான். ஆனால் சீர்படுத்த முடியாத சேதத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு ஆரம்பத்திலேயே கண்டறிவது முக்கியம். ஈறு நோய் ஏற்பட்டால் எளிதில் ரத்தம் கசியும் அல்லது மென்மையாக இருக்கும். ஈறுகள் சிவப்பு அல்லது வீங்கிய ஈறுகளாக காணப்படும். வாய் துர்நாற்றம், மெல்லும் போது வலி ஏற்படும். பற்களின் சீரமைப்பில் மாற்றம் ஏற்படும். பல் மருத்துவர் இவற்றை சரி செய்ய கம் லிப்ட் செயல்முறையைச் செய்வார். சிகிச்சைக்கு பின் பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.- டாக்டர் விஜய்பாரத், பல் மருத்துவர், அரசு மருத்துவமனை, காளையார்கோவில்சிவராமன், ராஜபாளையம்: எனக்கு 60 வயதாகிறது. அனைத்து பற்களையும் இழந்து நிரந்தர பல் கட்ட எண்ணினேன். மேல் தாடையில் போதுமான எலும்பு இல்லாததால் இம்ப்ளாண்ட் செய்ய முடியாது என்றனர். கழட்டி மாற்றும் பல் செட்டு தான் மாட்ட முடியும் என்கின்றனர். தீர்வு என்ன?தீர்வு உண்டு. மனித உடலின் ஜீரணத்திற்கும், சீரான முக தோற்றத்திற்கும் பல் முக்கிய பங்கு வகிக்கிறது. எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனை செய்த பின் மேல் தாடையில் போதுமான அளவு எலும்பு இல்லையென்றாலும் கண்களுக்கு கீழ் உள்ள எலும்பின் ஆதரவில் மேல் தாடையில் முழு பல் செட் கட்ட முடியும். ஸ்குவாடு சைக்கோமா இம்ப்ளாண்ட் முறையில் சிகிச்சை வழங்கும் பல் மருத்துவர்களை அணுகி தீர்வை காணலாம்.- டாக்டர் தினேஷ் பாபு, பல் மருத்துவர், ராஜபாளையம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !