உள்ளூர் செய்திகள்

ஈஸ்னோபீலியா!

சுவாசப் பாதையில் ஏற்படும் ஆஸ்துமா, அலர்ஜி, பிராங்கிடிஸ், கொசுவால் வரும் யானைக்கால் நோய் உட்பட பல கோளாறுகளை குறிக்கும் பொதுவான பெயர் 'ஈஸ்னோபீலியா!'ரத்த வெள்ளை அணுக்களின் ஒரு வகையான 'ஈஸ்னோபில்'கள் தீவிர நோய் தொற்றின் போது, 1 மைக்ரோ லிட்டர் ரத்தத்தில் 500க்கும் அதிகமாக இருக்கும். ஆஸ்துமா என்றால் பயம் வரும். ஆனால், ஈஸ்னோபீலியா என்றால், சீசனில் வந்து விட்டு போய்விடும் என்று இயல்பாக எடுத்துக் கொள்வர். குளிர் காலத்தில் 'புளூ, கொரோனா, ரைனோ' உட்பட வைரஸ் தொற்றுகள் பாதிக்கும் போது, இயல்பாக ஐந்தாறு நாட்களில் சரியாகி விடும். ஈஸ்னோபீலியா இருப்பவர்களுக்கு வைரஸ் கிருமி சுவாச மண்டலத்தை துாண்டிவிடும். இதன் தாக்கத்தால் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் வரை இருமல் இருக்கலாம்.இரவில், அதிகாலை நேரத்தில் இருமல் அதிகமாகலாம். சிலருக்கு நாள் முழுதும் இருக்கும். கொரோனா தொற்றுக்கு பின், புதிதாக ஆஸ்துமா பாதிப்பு பலருக்கு வந்தது. பருவ நிலை மாற்றத்தை நம்மால் மாற்ற முடியாது. ஆனால், வாழ்க்கை முறையை நமக்கு தகுந்தவாறு மாற்றலாம்.சிட்ரஸ் பழங்கள், தயிர், மோர், சமைக்காத காய்கறிகள், நெய், இனிப்புகள், பச்சை வெங்காயம், பசலைக்கீரை, சாக்லேட் என்று அவரவருக்கு எத்தகைய உணவுகள் அலர்ஜியை அதிகப்படுத்துகின்றன என்பதை அறிந்து அவற்றை தவிர்க்க வேண்டும். அதிக கலோரிகள் சாப்பிட்டு உடம்பை உஷ்ணமாக வைத்துக் கொள்வது, கதகதப்பான ஆடைகளை அணிவது, எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்ப்பது முக்கியம். புளூ தடுப்பூசி போட்டுக் கொள்வது ஓரளவுக்கு பாதுகாப்பு தரும். தொடர்ந்து ஒரு மாதம் இருமல் இருந்தால், வாரம் ஒரு ஆன்டிபயாடிக் மருந்து சாப்பிடுவது, வேறு வேறு டாக்டரிடம் ஆலோசனை பெறுவது பலன் தராது. பல நோய்களை போன்று இதுவும் மரபியல் காரணிகளால் வரக்கூடியது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் ஈஸ்னோபீலியா வராமல் தவிர்க்க முடியும்.டாக்டர் அம்மையப்பன் பழனிசாமி,சுவாச நோய்கள் சிறப்பு மருத்துவர், எம்.ஜி.எம்.மலர் மருத்துவமனை, சென்னை044 - 4524 2407info@mgmhcmalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்