உள்ளூர் செய்திகள்

கொழுப்பை குறைக்கும் வழிமுறைகள்

இதய கோளாறுகள் உண்டாக காரணமாக இருப்பதால், கொழுப்பு உடம்புக்கு கெடுதல் என்று நினைக்கிறோம். ஆனால், ஆரோக்கியமான செல்கள் உருவாக, செல்களுக்கு தேவையான புரதத்தை ரத்த ஓட்டத்தின் வழியே கொண்டு செல்ல, பித்த நீர் சுரப்பு, ஹார்மோன் செயல்பாடுகளை துாண்டவும் கொழுப்பு அவசியம். இதற்கு போக மீதமுள்ள கொழுப்பு, ரத்த ஓட்டத்தில் கலந்து, ரத்த நாளங்களில் அடுக்காக படிந்து குறுகச் செய்யும். நல்ல கொழுப்பான ஹெச்டிஎல், கெட்ட கொழுபான எல்டி.எல்.,ஐ ரத்த நாளங்களில் இருந்து வெளியேற்றி, கல்லீரலுக்கு எடுத்து செல்கிறது. அங்கு உடைக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இது தவிர, எண்ணெய், வெண்ணெய் வாயிலாக டிரைகிளிசரைட்ஸ் எனப்படும் கொழுப்பு வகை ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. உண்மையில் இந்த கொழுப்பு நம் உடலுக்கு எந்த விதத்திலும் அவசியம் இல்லை.சிலர் பிறவியிலேயே தாய், தந்தை, இருவரிடம் இருந்தும் அசாதாரணமான மரபணுவை பெற்றிருப்பர். இது சிலருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம். பலருக்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கம், உடல் பருமன், சர்க்கரை கோளாறு, சிகரெட் பழக்கம், மஞ்சள் காமாலை என்று வெளிக் காரணிகளின் துாண்டுதல் ஏற்படும் போது, எல்.டி.எல்., மேலும் அதிகரிக்கலாம். உணவில் டிரான்ஸ் பேட்ஸ் எனப்படும் கொழுப்பாகவே மாறி உடலில் சேரும் பேக்கரி உணவுகள், நிறைந்த கொழுப்பு உள்ள நெய், வெண்ணெய், எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள் அபாயத்தை மேலும் அதிகரிக்கும்.மாதவிடாய் நிற்கும் வயதில் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் அதிக அளவில் கெட்ட கொழுப்பு உடலில் சேரும். இது தவிர, தைராய்டு குறைபாடு, நீண்ட நாட்கள் இருக்கும் கல்லீரல் நோய்கள், துாக்கமின்மை,குடலில் நல்ல பாக்டீரியாக்கள் குறைவாக இருப்பது, மன அழுத்தம், பதற்றம், உடற்பயிற்சியின்மை போன்றவை கெட்ட கொழுப்பை அதிகரிக்கலாம்.அறிகுறிகள்ஆரம்ப நிலையில், எந்த வித அறிகுறியும் தெரியாது. கைகளின் மேற்புறம், முழங்கால், மூட்டுகள், கருவிழி,கண் இமைகளில் கொழுப்பு படியலாம் அடிக்கடி மலம் போவது, பசியின்மையும் இருக்கும். ரத்த நாளங்களில் கோளாறு இருந்தால் மார்பு பகுதியில் வலி, தசை பிடிப்பு, பாதங்களில் புண். பக்கவாத அறிகுறிகள், பார்வையில் மாற்றம், கல்லீரல், உமிழ்நீர் சுரப்பி விரிவடைவதுகாரணம் தெரியாமல் ஏற்படும் வயிற்று வலி, சில பெண்களுக்கு 'பிசிஓஎஸ்' எனப்படும் கருக்குழாயில் நீர்க் கட்டி உருவாவது போன்றவை.கெட்ட கொழுப்பை குறைக்க தரப்படும் அனைத்து மருந்துகளும் பக்க விளைவை தரக் கூடியவை. முடிந்த வரை வாழ்க்கை முறை மாற்றங்களை செய்து, கொழுப்பை குறைப்பது தான் ஆரோக்கியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்