உள்ளூர் செய்திகள்

எண்ணெய் குளியல் நல்லதா...!

என் குழந்தை அடிக்கடி கால் வலிக்கிறது என்கிறான். கால்சியம் குறைபாடு என டாக்டர் மருந்து கொடுத்தார். இருந்தும் வலி குறையவில்லை.குழந்தைகள் நின்று கொண்டே இருப்பதாலும், விளையாடிக் கொண்டே இருப்பதாலும், கால்களில் போதிய ரத்தமின்றி ஆக்ஸிஜன் குறைபாட்டினால் ஒருவித உளைச்சல் தோன்றலாம். இதனை குறக்கு வலி என்பர். இரவில் ஏ.சி. அறையில் துாங்குபவர்கள், ஈரமான இடத்தில் நடப்பவர்கள், உடல் பலகீனமானவர்களுக்கு கால் தசை திடீரென இழுத்துக்கொள்ளும். குழந்தைகளுக்கும் இந்த வலி ஏற்படலாம். இதனை தவிர்க்க வல்லாரை லேகியத்தை பாலில் ஒன்று முதல் இரண்டு கிராம் தினமும் கொடுத்துவர கால் தசை வலி நீங்கும். சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் கற்பூராதி தைலத்தை குளிப்பதற்கு முன்பு அல்லது இரவு படுக்கும்போது தடவி வரலாம்.எனக்கு உள்காய்ச்சலாகவே இருக்கிறது. 'டெம்பரேச்சர்' பார்த்தால் இயல்பாக உள்ளது. இதற்கு காரணம் என்ன?சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டால் இவ்வாறு ஏற்படலாம். இதற்கு சிறுநீரை பெருக்கக்கூடிய மருந்து மற்றும் உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம். குழந்தைகள் ஒன்றரை முதல் இரண்டு லிட்டரும், பெரியவர்கள் மூன்று முதல் மூன்றரை லிட்டரும் தண்ணீர் அருந்துவது நல்லது. சிறுநீர் பாதையில் எரிச்சலை குறைத்து உடம்பு உள் சுரமாக இருப்பதை கட்டுப்படுத்துவது வெண்பூசணி லேகியம். இந்த லேகியத்தை தினமும் 5 கிராம் அளவு இரவு படுக்கும் முன் சாப்பிட்டால் சூடு குறையும். வாரம் ஒரு நாள் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.அடிக்கடி எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?எண்ணெய் தேய்த்து குளிப்பது நம் தமிழர் மரபு. வாரம் ஒன்று அல்லது இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் செல்கள் வெப்பம் அடைவதில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். வெப்பத்தினால் செல்கள் விரிவடைந்து நீர்சத்து வற்றி பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க வாரம் இரு நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய் ஆகிய மூன்றினால் எண்ணெய் முழுக்கு செய்யலாம் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. அனைவருக்கும் ஏற்றது நல்லெண்ணெய். எண்ணெய் முழுக்க செய்த பின் இள வெந்நீரில் குளிக்க வேண்டும். அன்று போதுமான நீர் அருந்த வேண்டும். வெளியில் அலைவதை தவிர்க்க வேண்டும்.காது வலிக்கு அடிக்கடி காதில் மருந்து விடலாமா. என் நண்பர்கள் சூடான எண்ணெயை காதில் ஊற்ற சொல்கிறார்கள்?காதில் மருத்துவரின் ஆலோசனை இன்றி எண்ணெய் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். காது ஜவ்வில் ஓட்டை உள்ளவர்கள் எண்ணெய் ஊற்றுவதால் ஒவ்வாமை ஏற்பட்டு தீராத காது பிரச்னைக்கு ஆளாகிறார்கள். எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி தான் காதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். சித்த மருத்துவத்தில் எண்ணெய் ஊற்றுவதை விட காது மடலில் எண்ணெயை தடவி நீவி விடுவதால் காது பிரச்னைகளில் இருந்து காத்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. காதில் விடுவதற்காக சிரரோக நிவாரணத்தைலம், சுக்குத் தைலம் போன்றவை சித்த மருந்து கடைகளில் கிடைக்கும்.- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ் சித்த மருத்துவர்98421 67567


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !