ஐந்தில், இரண்டு தெரிந்தால் பாஸிடிவ்!
செயற்கை சர்க்கரை நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்பது போன்று இன்னொரு விஷயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அது, கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை முடிவுகள் குறித்து தரப்படும் மெடிக்கல் ரிப்போர்ட். இதில் உள்ள விபரங்களை டாக்டர்கள் சிலர் தவறாக புரிந்து கொள்கின்றனர். இது பற்றி அவர்கள் சமுக வலைதளங்களில் தரும் விளக்கங்கள் சரியாக இல்லை. பரிசோதனைமெடிக்கல் ரிப்போர்ட்டில் உள்ள விபரங்களை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று விளக்குகிறேன்: கொரோனா பாதித்தவரின் மெடிக்கல் ரிப்போர்ட்டில், 'இன் சென்சிடிவ் பார் சார்ஸ் கோ 2..., பட் பாஸிடிவ் பார் சார்பிகோ வைரஸ்' என்று இருப்பதாக நாகர்கோவில் மருத்துவர் ஒருவர் சொல்கிறார். இது தவறு. அப்படி எதுவும் அரசு மருத்துவமனைகளில் தரப்படும் ரிப்போர்ட்டில் இல்லை. அதில் இருப்பது, இன்கன்குளுசிவ் பார் சார்ஸ் கோ 2 என்று தான் உள்ளது.இதற்கு அர்த்தம், தற்போது வைரஸ் தொற்று இருப்பது உறுதியாக தெரியவில்லை. அடுத்த சில நாட்கள் கழித்து மீண்டும் தொற்று அறிகுறி இருந்தால் இன்னொரு முறை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும், என்பதுதான்.கொரோனாவில் ஏழுவகை உண்டு. இதில், சார்ஸ், மேர்ஸ், சார்ஸ் கோவிட் 2... இவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.ஐந்து புரதங்கள்ஜலதோஷத்தை உண்டு பண்ணும் வைரஸ்களின் ஒன்றான, ரைனோ வைரசில் ஒரு பிரிவுதான் சார்பிக்கோ வைரஸ், இதன் ஒரு பிரிவு தான் கொரோனா வைரஸ், எப்போது பரிசோதனை செய்து பார்த்தாலும் 25 சதவீதம் பேருக்கு ரைனோ வைரஸ் தொற்று இருக்கும் என்று சொல்வது முற்றிலும் தவறு. கொரோனா வைரசிற்கும் ரைனோ வைரஸ் சிற்க்கும் சம்பந்தம் இல்லை. கொரோனா வைரசிற்கு செய்யப்படும் பரிசோதனை ஆர். டி-பி. சி.ஆர்., இந்த சோதனையில் கொரோனா வைரசில் உள்ள ஐந்து புரதங்களை பார்க்க முடியும். இதில், இரண்டு அல்லது மூன்று புரதங்களை தெளிவாக பார்க்க முடிந்தால், கொரோனா பாஸிட்டிவ் என்று சொல்லிவிடலாம். ஒரு புரதம் மட்டும் தெளிவாக தெரிகிறது, இன்னொன்று தெளிவில்லாமல் இருந்தால் இன்கன்குளுசிவ் என்று ரிப்போர்ட்டில் எழுதி இருப்பார்கள். புரதம் இல்லாமல் இருந்தால் நெகடிவ் என்று இருக்கும்.அதனால், இன்கன்குளுசிவ் அல்லது பாஸிடிவ் என்று பரிசோதனை முடிவு இருந்தால், தனிமையில் இருங்கள்; மருத்துவ ஆலோசனையை முறையாக பின்பற்றுங்கள்; அதுதான் நல்லது.