ஆழ் மூச்சு விட்டால் இடது மார்பில் வலி!
ஹரிணி, குரோம்பேட்டை, சென்னை: என் வயது 18, என் இடது பக்க மார்பு, அசையும்போது வலிக்கிறது. உருவாகும் வலி, நெஞ்சுக்கும், கைக்கும் பரவுகிறது. மூச்சு இழுத்து விடும்போதும் வலிக்கிறது. இதற்கு காரணம் என்ன?இள வயதில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த வலிக்கு, தசையே காரணம். காய்ச்சல், இருமல், வேறு தொற்றுகள், ஆழ்ந்து மூச்சு விடும்போது, மார்பில் வலி ஆகியவை, நுரையீரல் மேல் புறத்தில் வீக்கம் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இது தானாகவே சரியாகக் கூடியது. இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு வலி தொடர்ந்தால், மருத்துவரை அணுகவும்.