உள்ளூர் செய்திகள்

கால்களின் திறனை மறக்க செய்யும் காலணிகள்!

நம் நாட்டை பொருத் தவரை, 20 ஆண்டு களுக்கு மேல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள் பலரும், என்னை போன்றே 6,000த்திற்கும் அதிகமான மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர். அந்த அள விற்கு மூட்டு தேய்மானம் பொதுவானது.வயதாகும் போது மூட்டுகள் தேய்வது இயல்பு. ஆனால், குறிப் பிட்ட வயதிற்கு முன்னரே ஏன் தேய்மானம் ஆரம்பிக் கிறது என்பதை பார்க்க வேண்டும். பெண்களை அதிகம் பாதிக்கும் முழங் கால் மூட்டு தேய்மானத் திற்கு பிரதானமாக மரபி யல் காரணி இருக்கலாம். இது தவிர, உணவு, உடல் பருமன், உடற்பயிற்சி யின்மை, ஒழுங்கற்ற வாழ்க்கை முறையும் பிற காரணிகள். நம் நாட்டில் தெலுங்கு, குஜராத், பஞ்சாப் மாநில மக்களி டம் மூட்டு தேய்மானம் பொதுவான பிரச்னையாக உள்ளது.ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின் பற்றினால், மனிதன் 120 வயது வரை வாழலாம். இதில், 80 வயதிற்கு மேல், மூட்டு தேய்வது இயல்பு. ஆனால், கடந்த பல ஆண் டுகளாக நவீன வாழ்க்கை முறை மாற்றத்திற்கு நாம் கொடுக்கும் விலை, 50 வயதிற்கு முன்பே முழங்கால், மூட்டு தேய்ந்து, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.நவீன மருத்துவ தொழில்நுட்பத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை காலையில் செய்தால், அன்று மாலையே நடக்கலாம். அடுத்த நாள், பிசியோதெ ரபி உதவியுடன் மாடிப் படிகளில் ஏறலாம். மூன் றாவது நாள் வீட்டிற்கு சென்று விடலாம்.முழுமையாக குணம் டைய மூன்று, நான்கு வாரங்களாகும். இந்த நாட்களிலும் முழு ஓய்வில் இருக்க வேண்டியதில்லை. சுய வேலைகளை தாங்களே செய்யலாம்.நான்கு வாரங்களுக்கு பின் இயல் பாக இருக்க முடியும். இன்னொரு பக்கம், இதற் கென்றே பிரத்யேக கால ணிகள் வந்து விட்டன.பிரச்னை இருப்ப வர்களுக்கு அவரவரின் காலின் தன்மைக்கு ஏற்ப, சிலிக்கான் ரப்பரால் பிரத்யேகமாக செய்த காலணிகளை டாக்டரின் ஆலோசனையுடன் பயன் படுத்தலாம். என் தனிப்பட்ட அறிவுரை வலி இருந்தா லும் வெறும் காலுடன் நடப்பதே நல்லது. பாதங்கள் செய்ய வேண்டிய வேலையை காலணிகள் செய்தால், நாளடைவில் கால்கள் தன் இயல்பு தன்மையை, நடக்கும் திறனை மறந்து விடலாம்.டாக்டர் சி.விஜய் போஸ்,மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்,சிம்ஸ் மருத்துவமனை, சென்னை96777 15223, 044-20002001enquiry@simshospitals.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்