சுகமளிக்கும் சுக்கு பால்!
டீ, காபி என்பது நம் உணவு கலாசாரத்தில் கிடையாது. மழைக் காலத்தில் சூடாக சுக்கு, மல்லி பாலும், வெயில் காலத்தில் ராகி கூழும் குடிப்பர் நம் முன்னோர்.சுக்கு, உடம்பில் உள்ள கெட்ட திசுக்களை மட்டும் தேடி அழிக்கும் திறன் கொண்டது. 'பயோ அவைலபிலிட்டி' எனப்படும், நம் உடம்பில் செலுத்தப்படும் கேன்சர் செல்களை அழிக்கும் கீமோ மருந்தை, உடல் கிரகிக்கும் அளவு அதிகபட்சமாக, 70 முதல் 80 சதவீதம் உள்ளது. இந்த சிகிச்சையின் போது, தினமும் இரு வேளை சுக்கு பால் குடித்தால், சாப்பிடும் மருந்தும், உணவில் உள்ள சத்துக்களும் 100 சதவீதம் கிரகிக்கும் தன்மை ஏற்படும்.இஞ்சியை காய வைத்து சுக்காக மாற்றும் போது, இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோல் என்ற வேதிப் பொருள், அதைவிட இரண்டு மடங்கு திறன் கொண்ட ஷோகோல்களாக மாறும். இது, 'சைட்டோ டாக்ஸ்சிசிட்டி' எனப்படும், விஷத்தை அழிக்கக் கூடிய திறன் கொண்ட பொருள்.சுக்கு பால் தயாரிக்க...தனியா 100 கிராம், சுக்கு 50 கிராம், 20 ஏலக்காய் ஆகிய மூன்றையும் வெறும் கடாயில் போட்டு வறுத்து, பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 150 மில்லி நீரில், ஒரு ஸ்பூன் இந்த பவுடரைப் போட்டு, நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி, பால் சர்க்கரை சேர்த்து, காலை, மாலை இரு வேளையும் குடிக்கலாம். சர்க்கரைக்கு பதில், தேன், பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். சுக்கு பால் அருந்தும் போது, வயிறு தொடர்பான எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருப்பதோடு, சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச் சத்துக்கள் முழுமையாக கிரகிக்கும் தன்மையும் வரும்.கேன்சர் சிகிச்சையின் போதும், சிகிச்சை முடிந்த பின்பும் தினமும் இரு வேளை சுக்கு பால் குடிப்பது நல்லது.-சித்த மருத்துவம்