உள்ளூர் செய்திகள்

நின்ற, அமர்ந்த, நடந்த, சயன கோலங்கள்

உட்காருகிறோம், நிற்கிறோம், நடக்கிறோம். நம் வசதிக்கு ஏற்ப உடலை விருப்பம் போல எப்படி வேண்டுமானாலும் திருப்புகிறோம். பல நேரங்களில், உட்காரும் போது சரியான நிலையில் அமர்வதில்லை. இதனாலேயே காரணமில்லா உடல் வலி ஏற்படுகிறது.உடல் இயக்கத்தின் ஒவ்வொரு நிலையிலும் சாப்பிடும் போது, அமர்ந்திருக்கும் போது, உறங்கும் போது, 'பாடிபோஸ்சர்' எனப்படும் உடலின் நிலையை வைத்தால், உடல் வலி, முதுகு வலி, தசை பிடிப்பு, மூட்டு வலி, பாத வலி வராமல் தடுக்க முடியும்.எந்த நேரங்களில் எப்படி அமர்ந்தால் வலி குறையும் என்பதை பிசியோதெரபி போஸ்சரில் பார்க்கலாம். நின்ற கோலம் மொபைல் பயன்படுத்தும் போது அதிக நேரம் தலையை முன் பக்கமாக, குனிந்து பார்ப்பதாலோ, கழுத்தை வளைத்தோ இருந்தால் தோள் வலி, கழுத்து வலி ஏற்படும். அதை தவிர்க்க நிமிர்ந்து அமர்ந்து, கண்களுக்கு நேரெதிராக மொபைல் போனை பிடித்து பார்க்க வேண்டும்.அதிக நேரம் ஒரே நிலையில் மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முடிந்த வரை ஒயர்லெஸ் ஹெட்செட்டை குறைந்த ஒலியில் வைத்து பயன்படுத்தலாம். அலைபேசியில் வீடியோ பார்க்கும் போது அடிக்கடி கண்களை இமைக்க வேண்டும். அமர்ந்த கோலம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்ட கணினியின் பயன்பாட்டில், கணினி முன் முதுகு நேராக இருப்பது போல் அமர வேண்டும். அதேபோல், கீபோர்டை முழங்கைக்கு நேராக வைத்து டைப் செய்வதற்கு ஏதுவாக வைத்துக் கொள்ள வேண்டும். கீபோர்டு இயக்கும் போது முழங்கை டேபிள் மீது தாங்கி இருக்க வேண்டும்.அப்போது நிமிர்ந்து நேராக உட்கார்ந்து தோள்பட்டையை தளர்த்திக்கொள்ள வேண்டும். பாதம் தரையில் சமமாக படும் அளவிற்கு நாற்காலியை சரி செய்து கொள்ளவும். கால்களை பின்னிக் கொண்டு குறுக்காக வைத்துக் கொள்ளக்கூடாது. இப்படி செய்வதால் முதுகெலும்பு நேராகி உடல் வலிகள் இருந்தால் குறையும். நடந்த கோலம் ஹீல்ஸ் அணிவது நடைக்கு அழகாக இருந்தாலும் சிலருக்கு பாத வலியையும் தரக்கூடியது. ஹீல்ஸ் அணிந்து அதிக நேரம் நடப்பதால் முட்டி மற்றும் பாத வலி ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, தட்டையாக இருக்கும் செருப்புகளை அணியலாம். பாதங்கள் தரையோடு சமமாக இருக்கும் போது, முதுகு தண்டு நேராக இருக்கும். சயன கோலம்உறங்கும் போது உடல் பொசிஷனை சரியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மிக மென்மையாக, மிருதுவாக இருக்கும் மெத்தை நல்லது. அதேபோல் மெலிதான தலையணை பயன்படுத்தினால் முதுகு வலியைத் தவிர்க்கலாம். தலையணையை கால்களுக்கு அடியில் வைத்துக் கொள்வது நல்லது.கழுத்து வலி இருந்தால், தலையணையை தவிர்த்து, துண்டை சுருட்டி பின் கழுத்துக்கு அடியில் வைத்துக் கொண்டால் வலி குறையும். சிலருக்கு குப்புற கவிழ்ந்து படுக்கும் பழக்கம் இருந்தால், தட்டையான தலையணை, தலையணை இல்லாமல் துாங்குவது, கழுத்து, முதுகு வலி வராமல் தடுக்கும்; உடம்புக்கு நல்லது.எஸ். சசிகலா,பிசியோதெரபிஸ்ட், சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்