உள்ளூர் செய்திகள்

விழுந்த பல்லை முளைக்க வைக்கிறது ஸ்டெம்செல் சிகிச்சை

ஒவ்வொரு மனித உடலிலும், 37 லட்சம் கோடி செல்கள் உள்ளன. அவற்றில் சிறப்பு வாய்ந்தவை, 'ஸ்டெம் செல்'கள் என்றழைக்கப்படும் விசேஷ செல்கள். இவற்றுக்கென தனித்துவ குணம் இருக்காது. ஒரு ஸ்டெம் செல், தானே உடைந்து, முழு செல்லாக மாறிக் கொள்ளும் தன்மை கொண்டது. உடலின் சேதமடைந்த எந்த பகுதியில் ஸ்டெம் செல்லை வைத்தாலும், அந்தப் பகுதியை புதுப்பித்து, அந்தப் பகுதியின் பயன்பாட்டுத் தன்மையை பெற்றுவிடும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில், 50 ஆயிரம் முதல் இரண்டு லட்சம் ஸ்டெம் செல்கள் வரை இருக்கும். மனிதன் வளர வளர, இதன் எண்ணிக்கை மாறியபடி இருக்கும். ஒரு குழந்தையின் உடலில், பத்து லட்சம் ஸ்டெம் செல்கள் இருக்கும். பிரசவத்தின் போது கத்தரிக்கப்படும் தொப்புள்கொடியில் காணப்படும் ஸ்டெம் செல்கள், 90 விதமான உடல் பிரச்னைகளை தீர்க்கின்றன. மூளையில், இரத்தத்தில், எலும்பு மஜ்ஜையில், தசை களில், தோலில், இதயத்தில், ஈரல் திசுக்களில் ஸ்டெம் செல்கள் காணப்படுகின்றன. ஸ்டெம் செல்கள் தீர்க்கும் வியாதிகளில் சிலவற்றைப் பார்ப்போம். * ரத்தப் புற்றுநோய் * நிணநீர்க்குழிப் புற்றுநோய் * எலும்பு மஜ்ஜையின் பிளாஸ்மாவை பீடிக்கும் புற்றுநோய் * தலசீமியா * எலும்பு மஜ்ஜை ரத்தச்சோகை * நரம்பு சிதைவு நோய் * இதயம் பழுதுபடுதல் * டைப் ஒன்று நீரழிவுநோய் * கீல்வாதம் * முதுகு தண்டுவட காயங்கள் சில உயிரினங்களின் உடலுக்கு, காயமேற்பட்ட அல்லது விபத்தில் காணாமல் போன உறுப்புகளை மீட்கும் தன்மை உண்டு. கதவில் சிக்கி வாலை இழக்கும் பல்லிக்கு வால் மீண்டும் முளைக்கிறது. அக்சலோட்ல் என்ற மீனின் முட்டைப் புழு, நட்சத்திர மீன், சாலமண்டர் பல்லி, கடல் குதிரை, கடல் பாம்பு, தட்டைப் புழு உள்ளிட்ட சில உயிரினங்களின் உடல் பாகங்கள், அவற்றின் உடலிலிருந்து நீங்கி விட்டால், மீண்டும் முளைக்கும். மனிதரின் தலைமுடியை, நகங்களை வெட்டினால் மீண்டும் முளைக்கும். ஒரு விரலை வெட்டினால், மீண்டும் முளைக்குமா... முளைக்காது. குழந்தைகளுக்கு இருபது பால்பற்கள் முளைக்கும்; ஆறு வயதில் விழ ஆரம்பிக்கும். நிரந்தர பற்கள், 12 வயதில் முழுமையாக முளைத்து நிற்கும்; 17- - 21 வயதில் அறிவுப்பல் முளைக்கும். அதன்பின் பற்கள் விழுந்தால், மீண்டும் முளைக்குமா... முளைக்கவே முளைக்காது! ஆனால் தற்போது, ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் விழுந்த பல்லை, பிடுங்கிய பல்லை, பற் சொத்தை அரித்த பல்லை, மீண்டும் முளைக்க வைக்கும் மேஜிக் கைகூடி வருகிறது. மனிதரின் வாயில், ஐந்து வகையான ஸ்டெம் செல்கள் காணக் கிடைக்கின்றன. * பல் கூழில் காணப் படும் ஸ்டெம் செல்கள் பற்களை மீண்டும் உருவாக்கும் பல் மருத்துவத்தில், பல்கூழ் ஸ்டெம்செல் முக்கிய பங்கு வகிக்கிறது. மூன்றாவது கடைவாய் பல்லில், உதிரும் பால் பற்களில், நுனி சதைக் காம்புகளில், பல்லுயிர் தசைநார்களில், பல் நுண்ணறை திசுக்களில், பல்கூழ் ஸ்டெம்செல் கிடைக்கிறது. * பல்லுக்கும் சதைக்கும் இடையே காணப் படும் ஸ்டெம்செல்கள் * பல் வேரின் நுனியில் உள்ள ஸ்டெம்செல்கள். இவை கூழ் வடிவில் இருக்கும். * ஈறு தசைநார்களில் கிடைக்கும் ஸ்டெம்செல்கள் * உதிரும் பற்களின் ஸ்டெம் செல்கள் இந்த ஐந்தாவது வகை ஸ்டெம்செல்கள், எலும்பு செல்களாகவும், கொழுப்பு செல்களாகவும், நரம்பணுக் களாகவும் மாறக்கூடிய வை. இத்தகைய ஸ்டெம்செல்கள் மூலம், பல காரணங்க ளால் பற்களை இழந்தவர்களுக்கு, புதிய பல்லை முளைக்கச் செய்யலாம்; பல் அமைப்பை சீரமைத்து சேதமுற்ற பற்களை பழுது பார்த்து சீர் செய்யலாம்; ஈறு நோயால் தேய்ந்த எலும்புகளையும், திசுக்களையும் பழைய நிலைக்கு மீட்கலாம்; ஈறு தசைநார்களை முழுமையாக புதுப்பிக்கலாம்; வேர்பகுதியை பழுதுபார்க்கலாம்; உமிழ்நீர் சுரப்பியை புதுப்பிக்கலாம்; வாயின் சளி ஜவ்வு அழற்சியை சரி செய்யலாம். பொது வாகவே, பரிசோதனைக் கூடங்களில், செல் கல்ச்சர் செய்து, ஸ்டெம்செல்களை, செயற்கையாக வளர்க்கலாம். மரபியல் பழுதுகளின் காரணங்களை ஆராயலாம். பழுதுபட்ட மனித அங்கங்களை நேர்படுத்தலாம். நோய்கள் எப்படி மனிதரை பீடிக்கின்றன புற்றுநோயின் தோற்றுவாய் என்ன என் பதனை கண்டுபிடிக்கலாம். செயல்திறன் மிக்க பாதுகாப்பான புதிய மருந்துகளை ஸ்டெம்செல் வைத்து சோதிக்க லா ம். அடுத்த இருபது வருடங்களில் பல்மருத்துவத்தில், ஸ்டெம் செல் சிகிச்சை முழு அளவில் பயன்பாட்டுக்கு வந்து விடும்! டாக்டர் ஆ. நிலாமகன், பல் மருத்துவர், நிலா டென்டல் கிளினிக், கோவை 80566 72043nilamahan24@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்