உள்ளூர் செய்திகள்

மூளையிலும் வைக்கலாம் ஸ்டென்ட!

பக்கவாதம் ஏற்பட்ட பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சுற்றியே பெரும்பாலும் பேசுகிறோம். பக்கவாதம் ஏற்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் ரத்த உறைவை உடைக்கும் மருந்துகளை தர வேண்டும். 24 மணி நேரத்திற்குள் ரத்தக் கட்டிகளை அகற்ற வேண்டும் என்பதை, 'பொன்னான நேரம்' என்கிறோம். இது குறித்து நகரங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். முகம் ஒரு பக்கம் இழுப்பது, தெளிவற்ற பேச்சு, பலவீனம் ஆகியவற்றைக் காணும்போது அவசர சிகிச்சைப் பிரிவுக்கு உடனடியாக செல்ல, 'பீ பாஸ்ட்' போன்ற பயிற்சிகள் பலருக்கு கற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளன. ஆனால் உண்மையில், 80 சதவீத பக்கவாதம் தடுக்கக்கூடியவை. பல நேரங்களில், பக்கவாதத்திற்கு சில நாட்கள், ஏன் வாரங்களுக்கு முன்பு பலவீனம், தற்காலிக பார்வை இழப்பு, பேசுவதில் சிரமம் போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் தெரியும். நாம் அதை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். மார்பில் வலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்கிறோம். ஆஞ்சியோகிராம் செய்து, தேவைப்பட்டால் ஸ்டென்ட் வைக்கப்படுகிறது. இதய தமனி அடைப்பை விரிவாக்க ஸ்டென்ட் பொருத்துவதை நன்கு தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் மூளையின் தமனிகளிலும் இதே போன்ற அடைப்புகள் ஏற்படலாம். மூளையின் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவுகள் மூளைக்கு ரத்தத்தை வழங்கும் தமனிகளை சுருக்குகின்றன, இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டால் வலிக்கும். ஆனால், மூளை வலியை உணராது. எனவே ஆரம்ப அறிகுறிகளை கவனிப்பதில்லை. உலகம் முழுவதும் பக்கவாத வடிவங்கள் வேறுபடுகின்றன. மேற்கத்திய நாடுகளில், கழுத்து தமனிகளில் அடைப்புகள் ஏற்படுகின்றன. ஆசிய மக்களில் 30 -- 50 சதவீதம் பேருக்கு மூளையில் உள்ள தமனிகளில் கொழுப்பு படிவதால் இஸ்கிமிக் பக்கவாதம் ஏற்படுகிறது. அதிக கொழுப்பு உள்ளவர் களுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டாலும் மூளை தமனி குறிப்பிடத்தக்க அளவில் குறுகக்கூடும் என்று பரிசோதனை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நவீன மூளை ஆஞ்சியோகிராம் மூளையின் ரத்த ஓட்டம், சுருக்கம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது, l கரோடிட் எண்டார்டெரெக்டோமி மூலம் கழுத்து தமனிகளில் உள்ள பிளாக்குகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். l கரோடிட் ஸ்டென்டிங் குறைந்தபட்ச ஊடுருவும் நுட்பங்கள் மூலம் குறுகலான தமனிகளை விரிவடையச் செய்யலாம். l இன்ட்ராக்ரானியல் ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங் - மிகவும் மென்மையானது. அதிக அளவில் செய்யப்படுகின்றன. தீவிர பாதிப்பு இருந்தால், பெருமூளை பைபாஸ் அறுவை சிகிச்சைகள் செய்து, அடைபட்ட தமனிகளைச் சுற்றி ரத்த ஓட்டத்தை சீராக்கலாம். பக்க வாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள், மூளை நாள பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். ஆஞ்சியோபிளாஸ்டி கடந்த பல வருடங்களாக இதயத்தின் குறுகிய, அடைபட்ட தமனியை சரி செய்ய ஆஞ்சியோபிளாஸ்டி பயன்படுவதைப் போன்று, நியூரோ-ஆஞ்சியோபிளாஸ்டி, அறுவை சிகிச்சைகள் தீவிர பாதிப்பு எற்படுவதற்கு முன் மூளைக்கும் செய்யலாம். டாக்டர் பிரதீப் பாலாஜி, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், ஐஸ்வர்யா மருத்துவமனை044 20252025 / 9840105510cc@iswarya.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !