வயிற்று கோளாறும் வைரஸ் பாதிப்பாக இருக்கலாம்!
கொரோனா வைரஸ் நம் உடலினுள் செல்லும்போது, ரீசபட்டார்கள் எனப்படும் ஏற்பிகள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள செல்களின் உள்ளே ஒட்டிக் கொள்ளும். செல்களுக்கு கிடைக்கும் நுண்ணுாட்ட சத்தை இவை எடுத்துக் கொண்டு, பல்கி பெருகி வளர ஆரம்பிக்கும். கொரோனா வைரஸ் வளர ஏதுவாக நுரையீரலில் உள்ள ஏற்பிகள் போன்றே, சிறுகுடலில் கீழ் பகுதியில் ஏற்பிகள் உள்ளன. இதனால், மூக்கு, வாய் வழியே செல்லும் வைரஸ் கிருமி, தொண்டையில் தங்கி, ஓரிரு நாளில், சுவாச குழாய் வழியே நுரையீரலை பாதிப்பது போன்றே, ஜீரண மண்டலத்தையும் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.சுவாச கோளாறுகடந்த நான்கு மாதங்களில், சீனா மற்றும் அமெரிக்காவில் இந்த வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படுவது, எழு - எட்டு சதவீதம் உள்ளது. நம் நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றால், 20 சதவீதம் பேர், ஜீரண மண்டல பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இதற்கு காரம், நுரையீரலில் இருப்பதை போது ஏற்பிகள் சிறுகுடலில இருப்பது தான். கடந்த ஒரு மாதத்தில், வாயு பிரச்னைக்காக என்னிடம் ஆலோசனைக்கு வந்தவர்களில், ஐந்து பேருக்கு, சுவாச கோளாறு, காய்ச்சல், உட்பட கொரோனா வைரஸ் அறிகுறிகள் எதுவும் இல்லாமல், வைரஸ் பாதிப்பு இருந்து உறுதியானது. மலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதனை செய்ய, நம்மிடம் தொழில்நுட்ப வசதிகள் இல்லை. வழக்கமாக இந்த வைரஸ் தொற்றுக்கு செய்யப்படும், மூக்கு, தொண்டையில் இருந்து எடுக்கப்படும் சளி பரிசோதனை மூலம் இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.எதிர்பாராத வயிற்று வழி, வயிறை இழுத்து பிடிப்பது போன்ற உணர்வு, வயிற்று போக்கு, அடிக்கடி மலம் கழிப்பது போன்றவை வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.இது தவிர, நன்கு படிக்கும் ஒருவருக்கு, பசி உணர்வு இல்லாமல் போவது, வாயு பிரச்னை அதிகம் இருப்பது, போன்றவையும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம் இந்த அறிகுறிகள் எல்லாம், சாதாரணமாக ஏற்படும் வயிறு பிரச்னையாகும் வரலாம். ஆனால், வைரஸ் தொற்று பாதிப்பு அதிகம் இருக்கும் இந்த நிலையில், வைரஸ் பாதிப்பாக இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.குழந்தைகளை பொறுத்தவரை நுரையீரல் சம்பந்தமாகவும், ஜீரண மண்டலம் தொடர்பாகவும் வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. கொரோனா வைரஸ் பாதித்தால் இன்னின்ன அறிகுறிகள் தான் இருக்கும் என்று இதுவரையிலும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடுகிறது. நுரையீரலில் பாதிக்கிறது; ஜீரண மண்டலத்தையும் தாக்குகிறது; அதே நேரத்தில் எந்த அறிகுறியும் இல்லாமலும் இருக்கிறது. வயிற்றில் வைரஸ் தாக்கம் இருக்கும் இரு நபர்களில், ஒருவருக்கு, வயிற்று போக்கு மற்றவருக்கு வாந்தி வரும் உணர்வும் அறிகுறிகளாக உள்ளது. வயிறு பிரச்னைகளும் வரும் நபருக்கு, இன்னின்ன கோளாறுகள் இருக்கலாம் என்று பொதுவாக டாக்டர்கள் சந்தேகிக்கும் நோய்களில் தற்போது, கொரோனா வைர சையும் வைத்துள்ளோம். அதற்கான பரிசோதனையும் செய்து விடுகிறோம்.ஆலோசனைவைரஸ் பாதித்த ஒருவர் பயன்படுத்திய பொருளை தொட்டு, கைகளை சுத்தம் செய்யாமல், அப்படியே உணவு சாப்பிட்டால் வயிற்றுக்குள் தொற்று சென்று விடலாம். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வயிற்று பிரச்னை, அலர்ஜி இருந்தால், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது இந்த சூழ்நிலையில் அவசியம்.வழக்கமாக வைரஸ் பாதிப்பிற்கு தரும் சிகிச்சையுடன் சேர்த்து, ஜீரண கோளாறுக்கும் சிகிச்சை தர வேண்டும்.டாக்டர் தீபக் சுப்ரமணியன்ஜீரண மண்டல சிறப்பு மருத்துவர்,எம்.ஜி.எம்., ஹெல்த் கேர்,சென்னை. 044 - 4524 2424