உள்ளூர் செய்திகள்

பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்

டெங்கு என்றால் என்ன?'ஏடிஸ் எஜிப்டி' (Aedes Aegypti) எனும் பெண் கொசுவால் பரவும் வைரஸ் தொற்று.டெங்கு கொசுக்கள் பகல் நேரங்களில் தான் கடிக்குமாமே?இவை சுத்தமான நீர்நிலைகளில் மட்டுமே வாழக் கூடியவை. பகலில் தான் கடிக்கும். டெங்குவின் அறிகுறிகள்?கடுமையான காய்ச்சல், வயிற்று வலி, தாங்க முடியாத அளவு தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை டெங்குவின் அறிகுறிகள். தொற்றின் தீவிர நிலையில் தட்டணுக்கள் குறைவதால், உடலில் அரிப்பு ஏற்படும், சிவப்புப் புள்ளிகள் தோன்றும். டெங்குவின் தீவிரம் எப்போது தெரியும்?பெரும்பாலானோருக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகி விடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும், டெங்கு சிண்ட்ரோம் (Dengue Shock Syndrome) உருவாகும். அப்போது கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப் போகும். சுவாசிக்கச் சிரமப்படுவர். ரத்த அழுத்தம் குறைந்து சுயநினைவை இழப்பர். டெங்குவால் ஏற்படும் பாதிப்புகள்?டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்து விடும். இவை தான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, உடல் உள் உறுப்புகளில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். உரிய நேரத்தில் சிகிச்சை தராவிட்டால் உயிரிழப்பு ஏற்படும். என்ன சிகிச்சை? டெங்கு நோய்க்கென்று தனியாகச் சிகிச்சையோ, தடுப்பூசியோ இல்லை. டெங்கு தானாகத்தான் சரியாக வேண்டும். அதுவரை ரத்தக்கசிவு, குறை ரத்த அழுத்தம் போன்ற ஆபத்தான விளைவுகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தரப்படும். என்ன பரிசோதனைகள் உள்ளன? என்.எஸ்.ஐ 1 ஆன்டிஜென் (Non Structural 1 Protein அல்லது NS1 antigen) பரிசோதனை செய்யலாம். இது, நோயாளியின் ரத்தத்தில் டெங்கு கிருமிகளுக்கான ஆன்டிஜென் உள்ளதா எனக் கண்டறியும் பரிசோதனை. டெங்கு சரியாகி விட்டது என எப்படி தெரிந்து கொள்வது?டெங்கு ஐ.ஜி.எம்., ஹெமெட்டோகிரிட் மற்றும் தட்டணுக்கள் பரிசோதனைகளை நோயாளிக்குக் காய்ச்சல் குறைந்த பின், அதாவது நோய் ஆரம்பித்த இரண்டாவது வாரத்தில் மீண்டும் செய்தால் தெரிந்துவிடும். ஒரு முறை வந்தவருக்கு மீண்டும் டெங்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதா?ரத்தத்தில் டெங்கு ஐ.ஜி.எம்., மற்றும் ஐ.ஜி.ஜி., எதிர் அணுக்கள் (Antibodies) இருக்கின்றனவா என பரிசோதனையில் அறியலாம். நோயாளிக்கு டெங்கு பாதிப்பு முதல் முறையாக இருந்தால், ஐ.ஜி.எம்., அளவு அதிகமாகவும், ஐ.ஜி.ஜி., அளவு குறைவாகவும் இருக்கும். டெங்கு பாதிப்பு மீண்டும் இருந்தால், ஐ.ஜி.எம்., அளவு குறைவாகவும், ஐ.ஜி.ஜி., அளவு அதிகமாகவும் இருக்கும். டெங்கு பாதிப்பை தடுப்பது எப்படி?கொசுக்களை ஒழிப்பது ஒன்றே இந்த நோயைக் கட்டுப்படுத்த ஒரே வழி.வெ.மணிகண்டன் தொற்று நோய் நிபுணர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !